2021 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Vrishchik Rasi (விருச்சிக ராசி)

வேலை / உத்தியோகம்


சனி பகவான் இந்த 2021ஆம் ஆண்டு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு சிறப்பான உதவிகளை செய்து உங்கள் உத்தியோகத்தில் நீண்ட கால வளர்ச்சியைப் பெற உதவுவார். பல ஆண்டு நீடிக்கும் ப்ராஜெக்ட் கிடைப்பதில் வெற்றிப் பெறுவீர்கள். பாகம் 1 மற்றும் 3-ல் குரு சனி பகவானோடு இணைந்து உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு சில தாமதங்கள் ஏற்படலாம்.
உங்களுக்கு அதிகப்படியான வேலைகள் செய்ய இருக்கும். அதிகரிக்கும் வேலை பளுவால் நீங்கள் அதிக நேரம் அலுவலகத்தில் வேலை சிய வேண்டிய தேவை உண்டாகலாம். இதனால் உங்களுக்கு சரியான தூக்கம் இல்லாமல், சக்தி குறைந்து உங்கள் உடல் நலமும் பாதிக்கப்படலாம். பாகம் 1 மற்றும் 3-ல் அலுவலகத்தில் அரசியல் உண்டாகும். உங்களுக்கு கிடக்க வேண்டிய பதவி உயர்வில் தாமதம் ஏற்படலாம். உங்கள் முதலாளி மற்றும் உடன் வேலை பார்ப்பவர்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவு பாதிக்கப்படலாம். யாரிடமும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்த்து விடுவது நல்லது.
குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிற்கு பாகம் 2 மற்றும் 4-ல் பெயர்ந்ததும் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். நீங்கள் உங்கள் ப்ரோஜெக்ட்டை சரியான நேரத்தில் முடித்து அலுவலகத்தில் பாராட்டுகளையும் பெறுவீர்கள். சிறப்பான நிதி சன்மான்கள் கிடைக்கும். உங்களால் அலுவலகத்தில் உங்கள் அந்தஸ்த்தை மீண்டும் பெற முடியும். அடுத்த நிலைக்கு நல்ல சம்பள உயர்வோடு உங்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும். நான்காம் பாகத்தில் தற்போது இருக்கும் உத்தியோகத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்றால், நீங்கள் புது வேலை வாய்ப்பிற்கு முயற்சி செய்யலாம். நீங்கள் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம், குடியேற்ற பலன்கள் போன்ற சலுகைகளை நீங்கள் உங்கள் நிறுவனத்தில் இருந்து பெறுவீர்கள்.


முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021




Prev Topic

Next Topic