2021 புத்தாண்டு தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி)

தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்


ராகு, கேது மற்றும் சனி பகவான் நல்ல நிலையில் சஞ்சரிக்காததால், தொழிலதிபர்கள் வலி மிகுந்த அனுபவங்களை அதிகம் கடக்க நேரிடும். ஆனால், குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு இந்த 2021ஆம் ஆண்டு நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். இதனால் இந்த ஆண்டின் அனேக காலங்களில் நீங்கள் சுமூகமான பயணத்தைப் பெறுவீர்கள்.
பாகம் 1 மற்றும் 3-ல் உங்களுக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வங்கிக் கடன்கள் ஒப்புதல் பெரும். உங்களுக்கு புது ப்ராஜெக்டுகள் கிடைக்கும், அது உங்கள் தொழிலை தொடர்ந்து நடத்த உதவியாக இருக்கும். உங்கள் போட்டியாளர்களை எதிர்த்து நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்கள் கடன் பிரச்சனைகள் குறையும். உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் உங்கள் தொழிலை விரிவுபடுத்த எண்ணினால், அதற்கு உங்கள் பிறந்த சாதகத்தின் பலம் இருக்க வேண்டும்.
ஏனென்றால், பாகம் 2 மற்றும் 4-ல் உங்களுக்கு அதிக சவால்கள் உண்டாகும். குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் வளர்ச்சியை மிகவும்பாதிப்பார். உங்கள் மறைமுக எதிரிகள் பலம் பெற்று உங்கள் வளர்ச்சியை பாதிக்க முயற்சிப்பார்கள். நீங்கள் கவனமாக இல்லை என்றால், துரோகங்களால் நீங்கள் பெரும் அளவு பணத்தை இழக்க நேரலாம். பாகம் 2 மற்றும் 4-ல் யாருக்கும் பணம் கடுப்பதையோ அல்லது யாரிடமும் இருந்து பணம் கடன் வாங்குவதையோ தவிர்த்து விடுவது நல்லது.


முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021


நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021


Prev Topic

Next Topic