2021 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி)

நிதி / பணம்


குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்ததால் நீங்கள் 202௦-ல் நிதி இழப்புகளை சந்தித்திருந்திருப்பீர்கள். இந்த 2021ஆம் ஆண்டு நீங்கள் பெரும் அளவு சிறப்பான பலன்களையும், நல்ல அதிர்ஷ்டத்தையும் காண்பீர்கள். உங்கள் நிதி நிலையில் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் கடன்களை நீங்கள் விரைவாக அடைக்கத் தொடங்குவீர்கள். உங்கள் வங்கிக் கடன்கள் எந்த சிக்கலும் இன்றி ஒப்புதல் பெரும். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம்.
1 மற்றும் 3ஆம் பாகத்தில் குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பதன் பலத்தால் உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். இதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் சொத்துக்களில் முதலீடுகள் செய்யலாம், மேலும் அதன் மூலம் ஒரு வருமானத்தையும் ஈட்டலாம்.
குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் பாகம் 2 மற்றும் 4-ல் சஞ்சரிக்கும் உங்கள் செலவுகள் அதிரிக்கும். நீங்கள் சேமித்து வைத்திருக்கும் பணம் விரைவாக கரையும். இருப்பினும், 202௦ போல இந்த ஆண்டு விடயங்கள் மோசமாக இருக்காது. பாகம் 2 மற்றும் 4-ல் நீங்கள் கவனமாக இருந்து, செலவுகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தாள், இந்த 2021ஆம் ஆண்டு உங்களுக்கு பொற்காலமாக இருக்கும்.


முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021


நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021


Prev Topic

Next Topic