2021 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி)

நவம்பர் 20, 2020 முதல் ஏப்ரல் 5, 2021 வரை பொற்காலம் (90 / 100)


குரு உங்கள் ராசியின் 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு பெரும் அளவு அதிர்ஷ்ட்டம் உண்டாகும். இதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். சனி பகவான் மற்றும் குரு இணைந்து உங்களுக்கு நீச்ச பங்க ராஜ யோகத்தை உண்டாக்கி, சிறப்பான வளர்ச்சியை தருவார்கள். உங்கள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் அளவு உங்கள் பிறந்த சாதகத்தை சார்ந்தே இருக்கும்.
உடல் நல பிரச்சனைகள் மற்றும் மன வலி போன்றவற்றில் இருந்து நீங்கள் வெளியில் வருவீர்கள். உங்கள் குடும்பத்தினர்களின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளின் தாக்கம் குறையும். காதலர்கள் தங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல்களில் இருந்து வெளி வருவார்கள். கடந்த நாட்களில் உங்களுக்கு அவப்பெயர் ஏற்பட்டிருந்தால், உங்கள் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் நீங்கள் முயற்சிகளை எடுப்பீர்கள். உங்கள் குடும்பத்தினர்களுடன் நீங்கள் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். சுப காரியங்கள் நடத்த இது நல்ல நேரம்.


உங்களுக்கு இப்போது உத்தியோகம் இல்லாமல் இருந்தால், நீங்கள் நேர்காணலுக்கு செல்ல இது ஏற்ற நேரம். இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொண்டு, உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளில் இருந்து வெளி வந்து, பலம் பெற்று நீங்கள் நேர்காணல்களுக்கு உங்களை தயார் செய்ய வேண்டும். அடுத்த ஒருசில மாதங்களில் உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். விசா மற்றும் குடியேற்றம் குறித்த விடயங்களில் உங்களுக்கு நலல் முன்னேற்றம் ஏற்படும். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம்.


Prev Topic

Next Topic