![]() | 2021 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | நான்காம் பாகம் |
நவம்பர் 20, 2021 முதல் டிசம்பர் 31, 2021 வரை வேகம் குறையும் (40 / 100)
குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிற்கு முன்னோக்கி பெயருவார். சனி பகவான் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு உண்டாக்கும் பாதிப்புகள் தற்போது குரு மற்றும் சனி பகவான் இணைந்து சஞ்சரித்தது முற்றிலும் முடிந்து விட்டதால் அதிகமாக இருக்கும். உங்கள் குடும்பத்தில் புதிய பிரச்சனைகள் உண்டாகும். இந்த பாக காலகட்டத்தில் சுப காரியங்கள் நடத்துவதை தவிர்த்து விடுவது நல்லது.
அலுவலகத்தில் நடக்கும் அரசியலால் உங்கள் உத்தியோக வாழ்க்கை மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம். அலுவலகத்தில் உங்களுக்கு எந்த வளர்ச்சியும் இல்லாததால், உங்களுக்கு ஏமாற்றம் ஏற்படலாம். புதிய நிர்வாகம் அல்லது புதிதாக ஊழியர்கள் உங்கள் குழுவில் சேருவதால் உங்கள் முக்கியத்துவத்தை நீங்கள் அலுவலகத்தில் இழக்க கூடும். அலுவலகத்தில் ஏற்படும் மாற்றங்கள் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இருக்காது. உங்கள் உத்தியோகம் பாதுகாப்பாக இருக்கும், மேலும் வருமானமும் சீராக இருக்கும்., அனால் நீங்கள் பார்க்கும் உத்தியோகம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தராது. உங்கள் தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியை தவிர்த்து விடுவது நல்லது. அது உங்களுக்கு நிதி பிரச்சனைகளை உண்டாக்கி விடலாம்.
உங்கள் சேமிப்பை பாதிக்கும் வகையில் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். யாருக்கும் முடிந்த வரை பணம் கடன் கொடுப்பதையோ அல்லது யாரிடமும் இருந்து பணம் கடன் வாங்குவதையோ தவிர்த்து விடுவது நல்லது. பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளது. உங்கள் அதிர்ஷ்ட்டம் குறைவாக இருப்பதால் பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்து நீங்கள் விலகி இருப்பது நல்லது.
Prev Topic
Next Topic