2021 புத்தாண்டு உடல் நலம் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி)

உடல் நலம்


ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு சர்ப்ப கிரகங்களும் இந்த 2021ஆம் ஆண்டு முழுவதும் சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதால் உங்கள் உடல் நலத்தின் மீது நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் அனேக காலங்களில் குரு நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், உங்கள் உடல் நல பிரச்சனைகளின் தாக்கங்களை குறைப்பார். நீங்கள் உடல் நலம் குன்றிப் போனாலும், உங்களுக்கு சரியான மருந்து கிடைத்து விரைவில் குணமடைவீர்கள். குரு உங்கள் ராசியை பாகம் 1 மற்றும் பாகம் 3-ல் பார்வை இடும் போது உங்கள் உடல் நல பிரச்சனைகள் குறையும். உங்கள் மருத்துவ செலவுகளை நீங்கள் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் ஈடுசெய்து விடலாம்.
கேது உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் மனைவி/கணவனின் உடல் நலத்தை பாதிப்பார். சனி பகவான் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் பெற்றோர்களுக்கு உடல் நல பிரச்சனைகளை உண்டாக்குவார். பாகம் 2 மற்றும் பாகம் 4-ல் குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் போது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் நீங்கள் இரண்டு சர்ப்ப கிரகங்களின் தாக்கங்களை அதிகம் உணருவீர்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால் மது, புகை போன்ற தீய பழக்கங்களுக்கு நீங்கள் அடிமையாகி விடக் கூடும்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021



இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021






Prev Topic

Next Topic