![]() | 2021 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | காதல் |
காதல்
இந்த 2021 புத்தாண்டில், சர்ப்ப கிரகங்கள் உங்களுக்கு மனக்கவலை மற்றும் பதற்றத்தை உங்கள் காதல் வாழ்க்கையில் உண்டாக்குவார்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், இந்த ஆண்டின் அனேக நேரம் நீங்கள் இன்னல்களை சந்திக்க நேரலாம். நீங்கள் பிரிந்து விடும் சூழலும் ஏற்படலாம். ஆனால், குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் பிரச்சனைகளின் தாக்கத்தை குறைப்பார். இந்த 2021ஆம் ஆண்டு நீங்கள் திருமணம் செய்து கொள்ளவும் முயற்சிக்கலாம்.
பாகம் 1 மற்றும் பாகம் 3-ல் நீங்கள் நல்ல அதிர்ஷ்டத்தை காண்பீர்கள். திருமணம் ஆன தம்பதியினர் இந்த காலகட்டத்தில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நீங்கள் குழந்தை பேறுக்கு திட்டமிட்டால், அதற்கு முன் உங்கள் பிறந்த சாதகத்தின் பலத்தை பார்க்க வேண்டும். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்களுக்கு ஏற்ற வரன் கிடைத்து உங்களுக்கு திருமணமும் நடக்கும். ஆனால் பாகம் 2 மற்றும் 4-ல் நீங்கள் மோசமான பலன்களை அனுபவிக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். உங்கள் உறவை பாதுகாத்துக் கொள்ள நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic