![]() | 2021 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | மூன்றாம் பாகம் |
ஜூன் 20, 2021 முதல் நவம்பர் 20, 2021 வரை சிறப்பான நேரம் (85 / 100)
குரு வக்கிர கதி அடைந்து மீண்டும் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டிற்கு பெயர்ந்து சனி பகவானோடு இனிது சஞ்சரிப்பார். இரு கிரகங்களுக்கும் இடையே ஏற்பட்ட நீச்ச பங்க ராஜ யோகத்தில் இருந்து வெளி வருவதால், உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் ஏற்படும். இது உங்களுக்கு ஒரு பொற்காலமாக இருக்கும். கடந்த மாதங்களில் உங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் இப்போது இருக்காது. உங்கள் வாழ்க்கையின் அனைத்து விடயங்களிலும் நீங்கள் முன்னோக்கி செல்வீர்கள். உங்கள் உடல் நலம் சிறப்பாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கையின் அளவு அதிகரிக்கும்.
உங்கள் வளர்சிக்கும், வெற்றிக்கும் உங்கள் குடும்பத்தினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சமுதாயத்தில் நீங்கள் நல்ல பெயரையும், புகழையும் பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தில் குழந்தை பிறப்பதால் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
உங்கள் அலுவலகத்தில் நீங்கள் நல்ல பாராட்டுகளைப் பெறுவீர்கள். அடுத்த நிலைக்கு சிறப்பான சம்பள உயர்வோடு உங்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும். இந்த பாக காலகட்டத்தில் உங்களுக்கு புது வேலை வாய்ப்பும் கிடைக்கலாம். தொழிலதிபர்கள் சிறப்பான லாபத்தை காண்பார்கள். உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். பங்கு சந்தை வர்த்தகத்தில் உங்களுக்கு விண்ணைத் தொடும் லாபம் கிடைக்கும். இது உங்களுக்கு 6 வாரங்கள் மட்டுமே இருக்கும் ஒரு குறுகிய காலகட்டமாக இருந்தாலு, உங்களுக்கு நல்ல அதிர்ஷ்ட்டம் உண்டாகும்
Prev Topic
Next Topic