2021 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி)

வேலை / உத்தியோகம்


உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் போல இருக்கும். உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், நீங்கள் அனேக நேரங்களில் நல்ல அதிர்ஷ்டத்தை காண்பீர்கள். இருப்பினும், எதிர்பாராத பின்னடைவுகளையும் நீங்கள் சந்திப்பீர்கள். குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், இந்த புத்தாண்டு உங்களை நல்ல பலன்களோடு வரவேற்கும். உங்கள் வேலை அழுத்தம் மற்றும் பதற்றம் குறையும். நீண்ட காலமாக நீங்கள் பதவி உயர்வுக்கு காத்திருந்தால், அது இப்போது நடக்கும். நீங்கள் புது வேலை வாய்ப்பிற்கு முயற்சி செய்து கொண்டிருந்தால், உங்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து சிறப்பான வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏப்ரல் 5, 2021 வரை முதல் பாகத்தில் உங்களுக்கு கிடைக்கும் இந்த அதிர்ஷ்டம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். இதே போன்ற பலன்களை நீங்கள் 3ஆம் பாகத்திலும் பெறுவீர்கள்.
இருப்பினும், பாகம் 2 மற்றும் 4-ல் குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிற்கு பெயர்ந்த பிறகு ஏதிர்பாராத பின்னடைவுகள் உங்களுக்கு ஏற்படலாம். நிர்வாகத்தின் பக்கத்தில் இருந்து அதிக அரசியல் உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு ஏற்படலாம். நீங்கள் பதவி உயர்வை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள், அது சில சதிகளால் தாமதமாகும். உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் உங்களது விரைவான வளர்ச்சி மற்றும் வெற்றியைக் கண்டு உங்கள் மீது பொறாமைப் படுவார்கள். இதனால் அவர்கள் உங்களுக்கு அதிக பிரச்சனைகளையும் உண்டாக்கலாம். உங்கள் ப்ரோஜெக்ட்டை தக்க நேரத்தில் முடிக்க நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் மகா தசஈ பலவீனமாக இருந்தால், உங்கள் முதலாளியிடம் உங்களுக்கு கடுமையான வாக்குவாதம் ஏற்படலாம். பாகம் 2 மற்றும் 4-ல் நீங்கள் அலுவலகத்தில் துன்புறுத்தவும் படலாம்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021


இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021




Prev Topic

Next Topic