2021 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்


இந்த 2021ஆம் ஆண்டு நல்ல பலன்களுடன் தொடங்கும். குரு உங்கள் ஜென்ம ராசியை 7 ஆண்டுகளுக்கு பிறகு பார்வை இடுவதால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். சனி பகவான் மற்றும் ராகுவால் உண்டாகும் தாக்கங்களை குரு குறைப்பார். உங்கள் மனைவி/கணவன், குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் இருக்கும் உறவு சுமூகமாக இருக்கும். சுப காரியங்கள் நடத்த இது நல்ல நேரம். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரையும், புகழையும் பெரும்.
ஆனால் பாகம் 2-ஐ அடைந்ததும், குடும்பத்தில் இருக்கும் அரசியல் அதிகரிக்கும். கேது உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல உதவிகளை உங்கள் நண்பர்கள் மற்றும் ஆலோசகர்கள் மூலம் செய்வார். பாகம் 3-ல் ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த காலகட்டத்திற்குள் நீங்கள் சுப காரியங்களை சிறப்பாக முடித்து விட முயற்சிக்க வேண்டும். நீங்கள் அதிக உணர்ச்சிவசப்படும் நிலையிலும், மன உளைச்சலுடனும் இருப்பீர்கள். குடும்பத்தில் குழந்தை பிறப்பதால் உங்கள் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
நவம்பர் 2௦, 2021க்கு மேல் விடயங்கள் திடீர் என்று உங்கள் கட்டுப்பாட்டை மீறி நடக்கும். சனி பகவான் மற்றும் ராகுவின் தாக்கம் அதிகமாக உணரப்படும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்களது உணர்ச்சிவசப்படக் கூடிய குணத்தால் நீங்கள் அவமானப்படும் நிலை ஏற்படலாம். திருமணம் ஆன தம்பதியினர் கடுமையான சண்டைகளில் ஈடுபடக் கூடும். இதனால் நீங்கள் தற்காலிகமாக பிரியும் சூழலும் ஏற்படலாம். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்க மாட்டார்கள். உங்கள் குடும்பத்தினர்களுடன் நீங்கள் சட்ட பிரச்சனைகளிலும் ஈடுபட நேரலாம். நீங்கள் உளவில் ரீதியாக பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படியே நீங்கள் பாதிக்கப்பட்டால், உங்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி கட்டாயம் தேவைப்படலாம்.


முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021





Prev Topic

Next Topic