2021 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி)

நவம்பர் 20, 2021 முதல் டிசம்பர் 31, 2021 வரை கடுமையான சோதனை காலம் (30 / 100)


ராகு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டிலும், குரு 6ஆம் வீட்டிலும், சனி பகவான் 5ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு சாதகமற்ற பலனை உண்டாக்குவார்கள். உங்கள் உடல் மற்றும் மனம் எதிர்மறை சக்திகளால் பாதிக்கக் கூடும். உங்கள் மன உளைச்சல் பெரும் அளவு அதிகரிக்கும். நீங்கள் விரும்புபவருடன் இருக்கும் உறவு மிகவும் மோசமாக பாதிக்கக் கூடும். உங்கள் மனைவி/கணவன் மற்றும் குழந்தைகளுடன் உங்களுக்கு கருத்துவேறுபாடு ஏற்படலாம். நீங்கள் கவனமாக இல்லை என்றால், இந்த காலகட்டத்தில் நீங்கள் தற்காலிகமாக பிரிய நேரலாம். காதலர்கள் வலி மிகுந்த சம்பவங்களை கடக்க நேரலாம்.
உங்கள் உத்தியோக வாழ்க்கை பாதிக்கப்படும். இது குறிப்பாக கவனக் குறைவால் ஏற்படும். உங்கள் சொந்த பிரச்சனைகளை சரி செய்ய நீங்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்வீர்கள். உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் உங்களது இந்த பலவீனமான நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் பணத்தை பற்றி பெரிதும் கவலைப் பட மாட்டீர்கள். பணத்தை நிதானம் இல்லாமல் செலவு செய்வீர்கள். கசினோ அல்லது அதிர்ஷ்ட சீட்டு அல்லது சூதாட்டம் போன்றவற்றை இந்த காலகட்டத்தில் தவிர்ப்பது நல்லது.




Prev Topic

Next Topic