2021 புத்தாண்டு உடல் நலம் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி)

உடல் நலம்


கேது மற்றும் குருவின் பலத்தால், இந்த ஆண்டின் தொடக்கம் உங்களுக்கு நல்ல உடல் நலத்தோடு சிறப்பாகவே இருக்கும். உங்களுக்கு சரியான மருந்து கிடைத்து நீங்கள் விரைவில் குணமடைவீர்கள். உங்கள் உடல் விரைவாகவே செயல்பட்டு, கொழுப்பு சத்து, சர்க்கரை மற்றும் இரத்தக் கொதிப்பு போன்றவற்றை இயல்பான நிலைக்குக் கொண்டு வரும். சிறிய அளவு உடற்பயிற்சி மற்றும் எளிமையான மருந்துகள் கொண்டே உங்கள் உடல் நிலை மீண்டும் சீரான நிலைக்கு வரும். நீங்கள் விளையாட்டில் இருந்தால் சிறப்பாக செயல்படுவீர்கள்.
ஆனால் பாகம் 2 மற்றும் 4-ல் குரு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிற்கு பெயர்ந்ததும் நீங்கள் அதிக மன உளைச்சல் மற்றும் உணர்ச்சிவசப்படும் நிலைக்கு மாறுவீர்கள். உங்கள் சொந்த பிரச்சனைகளாலும், அதிக தனிமையில் இருப்பதாலும், நீங்கள் மன ரீதியாக பாதிக்கப்படலாம். நீங்கள் வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால், மற்றும் உங்கள் வீட்டை விட்டு தொலைதூரத்தில் இருந்தால், இது உங்களை மிக அதிகமாக பாதிக்கலாம். உங்கள் பிறந்த சாதக பலன் பலவீனமாக இருந்தால், நீங்கள் மது மற்றும் புகை போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாக நேரலாம். பாகம் 3-ல் அதாவது ஜூன் 2௦, 2021 முதல் அடுத்த 5 மாதங்களுக்கு உங்களுக்கு கலவையான பலன்கள் உண்டாகும்.

முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021



இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021






Prev Topic

Next Topic