2021 புத்தாண்டு வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி)

வழக்கு


இந்த 2021 புத்தாண்டின் தொடக்கத்தில் விடயங்கள் சற்று நல்ல நிலையில் உள்ளன. குரு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து சட்ட பிரச்சனைகளை சரி செய்ய உங்களுக்கு உதவுவார். குறிப்பாக ஏப்ரல் 5, 2021 வரை நீங்கள் சட்ட விடயங்களில் வெற்றிப் பெறுவீர்கள். நிலுவையில் இருக்கும் வழக்குகளில் இந்த தேதிக்கு முன் நீங்கள் வெளி வந்து விட முயற்சி செய்ய வேண்டும். நீதிமன்றம் செல்லாமலேயே நீங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கலாம்.
ஏப்ரல் 5, 2021 முதல் குரு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், உங்களால் அடுத்த ஒரு ஆண்டு காலத்திற்கு நல்ல அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்க முடியாது. மேலும் சனி பகவான் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் குடும்பம் சார்ந்த பிரச்சனைகள், குறிப்பாக விவாகரத்து, குழந்தை காவல், ஜீவனாம்சம் போன்ற பிரச்சனைகளில் நிலையை மேலும் மோசமாக்கக் கூடும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு மன உளைச்சலும் ஏற்படலாம். சுதர்சன மகா மந்திரம் அல்லது கந்தர் ஷஷ்டி கவசத்தை பாராயணம் செய்து உங்கள் பிரச்சனைகளின் தாக்கத்தை குறைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021



இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021






Prev Topic

Next Topic