![]() | 2021 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | காதல் |
காதல்
நீங்கள் யாரையாவது விரும்புகிறீர்கள் என்றால், இந்த 2021ஆம் ஆண்டின் தொடக்கம் உங்களுக்கு ஒரு பொற்காலமாக இருக்கும். ஏப்ரல் 2021க்கு முன் திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கலாம். திருமணம் ஆன தம்பதியினர் நல்ல மகிழ்ச்சியோடு இருப்பார்கள். குழந்தை பேரு பெரும் பாக்கியம் சிறப்பாக உள்ளது. நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்களுக்கு ஏற்ற வரன் கிடைக்கும். ஆனால், சனி பகவான் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் அதிக உணர்ச்சிவசப்பட்டும், மன ரீதியாக பலவீனமாகவும் இருப்பீர்கள்.
இரண்டாம் பாகத்தில் நீங்கள் விரும்புபவருடன் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். நீங்கள் கவனமாக இல்லை என்றால், அது கடுமையான வாக்குவாதத்தில் முடிந்து விடக் கூடும். பாகம் 3-ல் குரு மற்றும் சனி பகவான் வக்கிர கதி அடைவதால் உங்களுக்கு கலவையான பலன்கள் ஏற்படும். விடயங்கள் எந்த திசையிலும் நகராமல் தேக்க நிலை அடையும்.
எதிர்பாராவிதமாக, நவம்பர் 2௦, 2021 முதல் உங்களுக்கு கசப்பான அனுபவங்கள் ஏற்படும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்கள் காதல் வாழ்க்கையில் நீங்கள் பிரியும் அளவு வலி மிகுந்த சம்பவங்கள் நேரலாம். மேலும் நீங்கள் உங்கள் காதலை தெரிவிக்க முயற்சித்தால் அது நிராகரிக்கப்படலாம், அல்லது உங்கள் முயற்சி தோல்வியில் முடியலாம். நீங்கள் பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பீர்கள். ஒரு நல்ல ஆலோசகரை அணுகி இந்த சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic