![]() | 2021 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | இரண்டாம் பாகம் |
?????? 5, 2021 ????? ???? 20, 2021 ??? ???????? ???????????? (35 / 100)
குரு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிற்கு பெயர்ந்து கடுமையான பின்னடைவுகளை உண்டாக்குவார். மனம் மற்றும் உடல், இரண்டுமே இந்த காலகட்டத்தில் பாதிக்கக் கூடும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். உங்கள் குடும்பத்தில் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். இந்த காலகட்டத்தில் சுப காரியங்கள் நடத்துவதை தவிர்த்து விடுவது நல்லது.
அலுவலகத்தில் அதிகரிக்கும் அரசியலால் உங்கள் உத்தியோக வாழ்க்கை பாதிக்கக் கூடும். உங்கள் முதலாளி உங்களது வேலையை பார்த்து மகிழ்ச்சி அடைய மாட்டார். உங்களுக்கு கிடைக்கவிருக்கும் பதவி உயர்வில் தாமதங்கள் ஏற்படும். புது வேலை வாய்ப்பிற்கு முயற்சிக்க இது ஏற்ற நேரம் இல்லை. தொழிலதிபர்கள் போட்டியாளர்களிடம் இருந்து அதிகரிக்கும் அழுத்தத்தால் பாதிக்கப்படுவார்கள். உங்கள் செலவுகள் விண்ணைத்தொடும் அளவு அதிகரிக்கும். வீடு மற்றும் வாகன பராமரிபிற்காக நீங்கள் அதிக சிலவு செய்ய வேண்டிய தேவை ஏற்படலாம். உங்கள் வங்கிக் கடன் ஒப்புதல் பெறாமல் போகலாம்.
முடிந்த வரை பயணம் செய்வதை தவிர்த்து விடுவது நல்லது. புண்ணிய தலங்களுக்கு செல்ல திட்டமிடலாம். உங்கள் விசா மற்றும் குடியேற்றம் குறித்த பலன்கள் பெரும் விடயங்களில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் தேக்க நிலை ஏற்படலாம். முக்கிய முடிவுகள் எடுகும் முன் ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து பின்னர் செயல்பட வேண்டும்.
Prev Topic
Next Topic