![]() | 2021 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
பங்கு சந்தையில் நீண்ட கால முதலீடுகள் செய்பவர்கள் ஏப்ரல் 5, 2021 வரை இருக்கும் முதல் பாகத்தில் தங்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால் சனி பகவான் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஆப்சன் அல்லது ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் செய்ய ஏற்ற நேரமாக இல்லை. ஏப்ரல் 5, 2021 வரை ரியல் எஸ்டேட் முதலீடுகள் செய்ய ஏற்ற நேரமாக உள்ளது.
ஏப்ரல் 5, 2021 முதல் எதிர்மறை சக்திகள் அதிகரிக்கும். இந்த ஆண்டின் மீதமுள்ள காலத்தில் பங்கு சந்தை வர்தகத்தை முற்றிலுமாக தவிர்த்து விடுவது நல்லது. அதிகரிக்கும் சொந்த மற்றும் குடும்ப பிரச்சனைகளால் உங்கள் மன நிம்மதி பாதிக்கக் கூடும். இத்தகைய நிலையில் நீங்கள் வர்த்தகம் செய்ய முயற்சித்தால், நீங்கள் தவறான திசையில் சென்று பணத்தை வைத்து பெட்டிங் செய்யும் விடயங்களுக்கு அடிமையாகி விட நேரலாம். நீங்கள் கவனமாக இல்லை என்றால், அக்டோபர் 2021க்கு மேல் உங்களுக்கு நிதி இழப்புகள் ஏற்படலாம். வங்கி சேமிப்பு, நிரந்தர வைப்பு நிதி போன்ற பாதுகாப்பான முதலீடுகளை நீங்கள் ஏப்ரல் 5, 2021க்கு பிறகு செய்வது நல்ல யோசனையாக இருக்கும்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic