![]() | 2021 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
குரு உங்கள் ஜென்ம ராசியை பார்வை இடுவதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ராகு உங்கள் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து உண்டாக்கும் தாக்கம் குறையும். கேது உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரிபப்தால் உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கிகாரம் கிடைக்கும். உங்கள் உத்தியோக வாழ்க்கை நல்ல நிலையில் இருக்கும். உங்கள் மேலாளர் உங்கள் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார். பெரிய நிறுவனத்தில் இருந்து உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் இந்த அதிர்ஷ்டம் அனைத்தும் உங்களுக்கு ஏப்ரல் 5, 2021 வரை இருக்கும்.
ஏப்ரல் 5, 2021 முதல் ஜூன் 2௦, 2021 வரையிலான காலகட்டத்தில் இரண்டாம் பாகத்தில் விடயங்கள் சிறப்பாக இல்லாமல் போகலாம். உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் உங்களது விரைவான வளர்ச்சி மற்றும் வெற்றியைக் கண்டு உங்கள் மீது பொறாமைப் படுவார்கள். உங்கள் மறைமுக எதிரிகள் உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் பலம் பெறுவார்கள். நீங்கள் பொறுமையாக இருந்து கடுமையான வாக்குவாதங்களை தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் கவனமாக இல்லை என்றால், வருமானம் மற்றும் உத்தியோக இழப்பு ஏற்பட்டு, அவதிப்படும் நிலை ஏற்படலாம்.
ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரையிலான 3ஆம் பாக காலகட்டத்தில் விடயங்கள் நல்ல முன்னேற்றம் பெரும். குரு வக்கிர கதி அடைந்து உங்கள் ராசியின் 5ஆம் வீட்டிற்கு மீண்டும் பெயருவார். உங்கள் வேலை பளு மற்றும் பதற்றம் குறையும். நவம்பர் 2௦, 2021க்கு பிறகு இறுதி பாகத்தை நீங்கள் அடைந்ததும், உங்களுக்கு எதிர்பாராத பின்னடைவுகள் ஏற்படலாம். அதிகரிக்கும் சொந்த பிரச்சனைகள் உங்கள் உத்தியோகத்தை பாதிக்கக் கூடும். மறைமுக எதிரிகள் உங்களது இந்த பலவீனமான நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழக்க நேரலாம். டிசம்பர் 2021 வாக்கில் நீங்கள் உங்கள் விசா அந்தஸ்த்தை இழந்து மீண்டும் தாய் நாண்டு திரும்ப நேரலாம்.
முதல் பாகம்: ஜனவரி 1, 2021 – ஏப்ரல் 5, 2021
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 5, 2021 – ஜூன் 20, 2021
மூன்றாம் பாகம்: ஜூன் 20, 2021 – நவம்பர் 20, 2021
நான்காம் பாகம்: நவம்பர் 20, 2021 – டிசம்பர் 31, 2021
Prev Topic
Next Topic