2022 புத்தாண்டு தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி)

தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்



தொழில்முனைவோர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கடுமையான காலகட்டத்தை சந்திப்பார்கள். ஜென்ம குரு மற்றும் ராகு உங்கள் ராசியின் 4 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதன் பலனால் உங்கள் மறைமுக எதிரிகள் மற்றும் போட்டியாளர்களால் உங்களுக்கு அதிக பிரச்சணைகள் ஏற்படலாம். உங்கள் பங்குதாரருடன் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்களுக்கு எதிர்பாராத பின்னடைவுகளும் ஏற்படலாம். எனவே மே 2022 வரை நீங்கள் உங்கள் வணிகத்தை விரிவுபடுத்தும் முயற்சியை தவிர்த்து விட்டு, செலவுகளை குறைக்கும் முயற்சிகளை செய்வது நல்ல யோசனையாக இருக்கும்.



குரு உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டிலும் ராகு உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டிலும் சஞ்சரித்து ஏப்ரல் 14, 2022 முதல் உங்களுக்கு நல்ல பலத்தை தருவார்கள். மே 2022 முதல் நீங்கள் நல்ல மாற்றங்களை காண்பீர்கள். நவம்பர் / டிசம்பர் 2022 ஐ அடைந்ததும் உங்களுக்கு ஏற்படும் முன்னேற்றங்களால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களுக்கு நல்ல பண வரத்தை ஏற்படுத்தக்கூடிய நல்ல ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும். உங்கள் வணிகத்தை விரிவுபடுத்தவும் இது நல்ல நேரமாக உள்ளது. சுய தொழில் புரிவோர்கள் மற்றும் கமிசன் ஏஜெண்டுகளுக்கு இது நல்ல சன்மானங்கள் கிடைக்ககூடிய காலமாக இருக்கும்.



Prev Topic

Next Topic