2022 புத்தாண்டு கல்வி ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி)

கல்வி



மாணவர்களுக்கு இது ஒரு சவால் நிறைந்த காலமாக இருக்கலாம். நீங்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிக தனிமையை உணருவீர்கள், மேலும் இதனால் உங்கள் மனமும் குழப்பமான நிலையில் இருக்கும். உங்கள் நண்பர்களுடன் உங்களுக்கு கருத்துவேறுபாடுகள் ஏற்படலாம். நீங்கள் பரிச்சையில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றால், கடுமையாக உழைக்க வேண்டும். ஏப்ரல் 2022 வரை நீங்கள் எதிர்பார்க்கும் கல்லூரியில் சேர்க்கை கிடைக்காததால் உங்களுக்கு ஏமாற்றம் ஏற்படலாம். நீங்கள் ஒரு நல்ல ஆலோசகரை அணுகி ஆலோசனைப் பெற்று இந்த சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும்.



மே 2022 முதல் குரு உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆனதும் நீங்கள் சிறப்பான முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். உங்களுக்கு சிறந்த பள்ளி அல்லது பல்கலைகழகத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு பிறகு சேர்க்கை கிடைக்கும். உங்கள் குடும்பத்தினர்கள் டிசம்பர் 2022 வாக்கில் உங்களின் சாதனைகளைக் கண்டு பெருமைப் படுவார்கள். நீங்கள் விளையாட்டில் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கும் நல்ல நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள்.



Prev Topic

Next Topic