![]() | 2022 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
ஏப்ரல் 2022 வரை நீங்கள் கடுமையான சோதனை காலத்தில் இருப்பீர்கள். உங்களுக்கு எதிர்பாராத சாதகமற்ற செய்திகள் வரலாம். உங்கள் உறவினர்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவில் கசப்பான அனுபவங்கள் ஏற்படலாம். நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களை விட்டு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பிரியவும் வாய்ப்பு உள்ளது. திருமணம் ஆனவர்கள் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பார்கள். உங்களுக்கு சட்ட பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் மிகவும் பொறுமையாக இருந்து ஏப்ரல் 14, 2022 வரை உள்ள சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும்.
மே 2022 முதல் உங்களுக்கு குறிப்பிடத்தக்க அளவு நல்ல நிவாரணம் கிடைத்து உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்வீர்கள். ஏப்ரல் 2022 க்கு பிறகு உங்களுக்கு பெரும் அளவு நல்ல முன்னேற்றம் ஏற்படும்., நீங்கள் நவம்பர் 2022 ஐ அடைந்ததும் உங்கள் சக்தியையும் தன்னம்பிக்கையையும் மீண்டும் பெறுவீர்கள். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது ஏற்ற காலமாக இருக்கும். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரையும் புகழையும் பெரும். மேலும் புது வீடு வாங்கி குடி பெயரும் முயற்சியில் இந்த ஆண்டின் இறுதியில் வெற்றியும் பெறுவீர்கள்.
Prev Topic
Next Topic