![]() | 2022 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | முதல் பாகம் |
ஜனவரி 01, 2022 முதல் ஏப்ரல் 14, 2022 வரை மன உளைச்சல் (25 / 100)
ஜென்ம குரு மற்றும் ஏழரை சனியால் இந்த பாக காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கை மிகவும் மோசமாக பாதிக்கப்படும். உங்களால் ராகு மற்றும் கேதுவிடம் இருந்து எந்த பலனையும் எதிர்பார்க்க முடியாது. இந்த காலகட்டத்தில் உங்கள் மனம் மற்றும் உடல் இரண்டுமே பாதிக்கப்படும். உங்கள் குடும்பத்தினர்களின் உடல் நலனும் பாதிக்கப்படும். உங்களை சுற்றி பலர் இருந்தாலும் நீங்கள் அதிக தனிமையை மட்டுமே உணருவீர்கள்.
நீங்கள் புதிதாக திருமணம் ஆனவராக இருந்தால், உங்கள் உறவுகள் சார்ந்த விடயங்கள் சிறப்பாக இல்லாமல் போகலாம். உங்கள் உறவுகளுடன் உங்களுக்கு தேவையற்ற வாக்குவாதங்களும் கருத்துவேறுபாடுகளும் ஏற்படலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் தற்காலிகமாக பிரியும் சூழலும் ஏற்படலாம். காதலர்கள் வலி மிகுந்த பிரிவை சந்திக்க நேரலாம். புது வீட்டிற்கு குடி பெயரவும் சுப காரியங்கள் நிகழ்த்தவும் இது ஏற்ற நேரம் இல்லை. உங்களுக்கு ஏறபடும் தோல்விகள், ஏமாற்றங்கள் மற்றும் அவமானங்களால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படலாம்.
உங்கள் உத்தியோகம் சார்ந்த விடயங்களுக்கு இது சவால் நிறைந்த நேரமாக இருக்கலாம். நீங்கள் 24/7 வேலை பார்த்தாலும் உங்கள் நிர்வாகத்தினரை உங்களால் மகிழ்ச்சி அடையச் செய்ய முடியாது. மேலும் எந்த பலனும் இல்லாமல் நீங்கள் உத்தியோகத்தை இழக்க நேரலாம். சட்ட பிரச்சனைகளும் உங்களுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் மீதான தவறான குற்றச்சாட்டால் நீங்கள் பாதிக்கப்படலாம். நீங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டு உங்கள் உத்தியோகத்தை பாதுகாத்துக் கொள்ள பொறுமையாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்.
முடிந்த வரை பயணம் செய்வதை தவிர்த்துவிடுவது நல்லது. விசா மற்றும் குடியேற்றம் சார்ந்த விடயங்களில் உங்களுக்கு எந்த பலனும் கிடைக்காமல் போகலாம். யாருக்கும் குடிந்த வரை பணம் கடன் தருவதையோ அல்லது யாரிடமும் இருந்து பணம் கடன் வாங்குவதையோ தவிர்த்துவிடுவது நல்லது. பங்குச்சந்தை வர்த்தகம் உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும். நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு இந்த கடுமையான காலகட்டத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும்.
Prev Topic
Next Topic