![]() | 2022 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | நான்காம் பாகம் |
அக்டோபர் 23, 2022 முதல் டிசம்பர் 31, 2022 வரை நல்லப் பலன்கள் (70 / 100)
நவம்பர் 23, 2022 வரை ஏழரை சனியின் பாதகமான தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் நவம்பர் 24, 2022 க்கு பிறகு குரு உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி அடைவதால் நல்ல பலம் பெற்றும் விடயங்கள் பெரும் அளவு முன்னேற்றம் பெரும். ராகு உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார். நீங்கள் குரு மற்றும் ராகுவின் பலத்தால் நல்ல சக்தியைப் பெறுவீர்கள்.
உங்கள் வாழ்க்கைத்துணை, குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவு சிறப்பாக இருக்கும்.திருமணம் ஆன தம்பதியினர் தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். குழந்தை பேறு பெரும் பாக்கியம் சிறப்பாக உள்ளது. சுப காரியங்கள் நிகழ்த்தும் விடயங்களில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். திருமணம் நிச்சயித்து திருமணம் செய்யவும் இது நல்ல நேரமாக உள்ளது.
உங்கள் உத்தியோகத்தில் நல்ல வளர்ச்சியை எதிர்ப்பாக்க இது சிறப்பான நேரமாக உள்ளது. நல்ல சம்பள உயர்வோடு நீங்கள் அடுத்த நிலைக்கு பதவி உயர்வைப் பெறுவீர்கள். தொழில்முனைவோர்கள் தங்களுக்கு புது ப்ரோஜெக்ட்டுகளும் நல்ல பண வரத்தும் ஏற்படுவதால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்கள் வணிகத்தை விரிவுபடுத்த இது சிறப்பான நேரமாக உள்ளது. தொலைதூர பயணம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும். வெளிநாட்டிற்கு குடிபெயர இது நல்ல நேரம்.
உங்கள் நிதி நிலை சிறப்பாக உள்ளது. பண மழை பொழியும் வாய்ப்பும் உங்களுக்கு உள்ளது. நீங்கள் புது வீடு வாங்கி குடிபெயர முயற்சி செய்யலாம். பங்குச்சந்தை வர்த்தகத்தில் நீங்கள் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். முதலீடு செய்யும் சொத்துக்களை நீங்கள் வாங்க முயற்சிக்கலாம். உங்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்புகளைப் பற்றிக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் இந்த பாகத்தில் நல்ல நிலையில் செட்டிலாக முயற்சி செய்யுங்கள்.
Prev Topic
Next Topic