2022 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி)

ஏப்ரல் 14, 2022 முதல் ஜூலை 14, 2022 வரை சில முன்னேற்றம் (55 / 100)


இந்த பாக காலகட்டத்தில் நீங்கள் ஜென்ம குருவில் இருந்து வெளியில் வந்துவிடுவீர்கள். மேலும் ராகு உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்லப் பலன்களைத் தரத் தொடங்குவார். கேதுவிடம் இருந்தும் நீங்கள் நல்லப் பலனை எதிர்பார்க்கலாம். உங்கள் உடல் உபாதைகள் குறையும். உங்களுக்கு சரியான மருந்து கிடைத்து நீங்கள் விரைவில் குணமடைவீர்கள்.
உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக வெளியில் வந்துவிடுவீர்கள். உங்கள் காதல் வாழ்க்கையில் பிரிவுகள் ஏற்பட்டிருந்தால், பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமத்திற்கு நீங்கள் தயாராவீர்கள். உங்கள் மகன் மற்றும் மகளின் திருமணத்தை நீங்கள் நடத்துவீர்கள். சுப காரியங்கள் நிகழ்த்த இது ஏற்ற நேரம்.



புது வேலை வாய்ப்புக்கு முயற்சிக்க இது ஏற்ற நேரம். உங்கள் வேலை பளுவும் பதற்றமும் குறையும். உங்கள் உத்தியோக வாழ்க்கையை நீங்கள் சிறப்பாக சமாளிப்பீர்கள். உங்கள் பதவி உயர்வு மற்றும் உத்தியோகத்தில் முன்னேற்றத்தைப் பற்றி பேச இது நல்ல நேரம். தொழில்முனைவோர்கள் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள். சுய தொழில் புரிவோர்கள் மற்றும் கமிசன் எட்ஜெண்டுகள் நல்லப் பலனைப் பெறுவார்கள். உங்களுக்கு வெளிநாடு செல்ல விசாவும் கிடைக்கும். குடியேற்றப் பலன்கள் பெரும் விடயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
உங்கள் நிதி நிலையில் பெரும் அளவு முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் விரைவாக உங்கள் கடனை அடைத்துவிடுவீர்கள். உங்கள் வங்கிக் கடன் ஒப்புதல் பெரும். பங்குச்சந்தை வர்த்தகமும் உங்களுக்கு லாபத்தை தரும். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம்.





Prev Topic

Next Topic