2022 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி)

ஜூலை 28, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை கலவையானப் பலன்கள் (45 / 100)


குரு உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டில் வக்கிர கதி அடைவது சிறப்பாக இல்லை. ஆனால் சனி பகவான் வக்கிர கதி அடைந்து விடயங்கள் சிறப்பாக நடக்கச் செய்வார். இந்த பாக காலகட்டத்தில் நீங்கள் கலவையானப் பலன்களைப் பெறுவீர்கள். எனினும், இது குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் இல்லாத ஒரு மந்தமான மாதமாக இருக்கும். நீங்கள் உங்கள் உணவில் கவனம் செலுத்தி அதிக உடற்பயிற்சி செய்து உங்கள் ஆரோக்கியத்தை அதிகரித்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
உங்கள் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கலாம். உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் உறவினர்களுடன் கருத்துவேறுபாடுகள் ஏற்படுவதால் உங்கள் மன நிம்மதி பாதிக்கப்படலாம். ஆனால் இந்த பிரச்சனைகள் சில வாரங்களுக்கு மட்டுமே ஒரு குறுகிய காலத்திற்கு இருக்கும். காதலர்கள் தங்கள் காதல் வாழ்க்கையில் சிக்கல்களை சந்திப்பார்கள். மேலும் உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்களிடம் இருந்து சம்மதம் பெறுவது மிகவும் கடினமாக இருக்கலாம்.


உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் உள்ள வளர்சியில் வேகம் குறையும். நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும், இருந்தாலும் உங்களால் பதவி உயர்வு மற்றும் வெகுமதிகளை எதிர்பார்க்க முடியாது. செலவுகள் அதிகமாக இருக்கலாம். ஆனால் உங்கள் வருமானம் அதிகரிப்பதால் உங்களால் அதனை எளிதாக சமாளித்து விடமுடியும். பங்குச்சந்தை வர்த்தகத்தில் இருந்து உங்களுக்கு நல்ல வருமானம் ஏற்படும். முடிந்த வரை பயணம் செய்வதை தவிர்த்துவிட முயற்சி செய்யுங்கள். ஆனால் புண்ணியத்தலங்கள் செல்ல முயற்சிக்கலாம். உங்கள் விசா மற்றும் குடியேற்றப் பலன்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் தேக்கம் அடையலாம்.


Prev Topic

Next Topic