2022 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடுகள்



ஏப்ரல் 14, 2022 வரை உங்களுக்கு நிதி இழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் நீங்கள் பங்குச்சந்தை வர்த்தகத்தை முற்றிலுமாக தவிர்த்துவிடுவது நல்லது. புதிய முதலீடுகள் செய்வதையும் தவிர்த்துவிட வேண்டும். நீங்கள் செய்யும் முதலீடுகளால் உங்களுக்கு பண இழப்பு ஏற்படலாம். மேலும் ரியல் எஸ்டேட் முதலீடுகளில் இருந்தும் நீங்கள் விலகி இருப்பது நல்லது. புது வீடு வாங்க இது ஏற்ற நேரம் இல்லை. எனவே பாதுகாப்பான முதலீடுகளை செய்ய நீங்கள் முயற்சிக்க வேண்டும்.


குரு உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டிற்கு ஏப்ரல் 14, 2022 ஆண்டு வந்ததும் நீங்கள் நல்ல பலம் பெறத் தொடங்குவீர்கள். இருப்பினும், உங்கள் முன்னேற்றத்தின் வேகம் உங்கள் பிறந்த சாதகத்தை பொறுத்தே உள்ளது. ஏனென்றால் கேது உங்கள் ராசியின் 9 ஆம் வீட்டிலும் சனி பகவான் உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது ஒரு சாதகமற்ற நிலையாக உள்ளது. நீங்கள் நீண்ட கால முதலீடுகளை செய்ய முயற்சிக்கலாம். ஆனால் ஸ்பெகுலேடிவ் வர்த்தகத்தை நவம்பர் 2022 இறுதி வரை தவிர்த்துவிடுவது நல்லது.

நவம்பர் 23, 2022 முதல் டிசம்பர் 31, 2022 வரையிலான காலகட்டத்தில் அதிர்ஷ்ட சீட்டு மற்றும் சூதாட்டம் போன்றவற்றில் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் சொத்துக்களில் முதலீடு செய்ய முயற்சிக்கலாம். மேலும் நீங்கள் ஏதேனும் சொத்துக்களை விற்றால் அந்த பணத்தை ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு மாற்ற முயற்சிக்கவும் இது நல்ல நேரமாக உள்ளது. விஷ்ணு சஹாசார நாமம் கேட்டு சத்யநாராயண விரதம் இருப்பதால் நிதி நிலையில் உங்கள் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.



Prev Topic

Next Topic