![]() | 2022 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
இந்த 2022 புத்தாண்டின் தொடக்கம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது ஒரு சவால் நிறைந்த காலமாக இருக்கும். உங்களுக்கு எதிரான சதி மற்றும் அரசியலால் நீங்கள் அலுவலகத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவீர்கள். நீங்கள் அதிகம் நம்பிக்கை வைத்தவரே உங்களுக்கு எதிராக செயல்படுவார். உங்களுக்கு எதிரான துரோகங்களை ஜீரணிப்பது உங்களுக்கு கடினமான ஒன்றாக இருக்கலாம். அலுவலகத்தில் யாருடனும் மனதளவில் நெருக்கமாவதை தவிர்த்து விடுங்கள். அப்படி நீங்கள் செய்தால், அதனால் ஏற்படும் விளைவால் நீங்கள் உங்கள் ஏப்ரல் 2022 க்கு முன் உங்கள் உத்தியோகத்தையும் ராஜினாமா செய்து விட்டு அங்கிருந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படலாம்.
மே 2022 முதல் இந்த ஆண்டின் வரவிருக்கும் மாதங்கள் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. நீங்கள் அதிகம் சக்தியைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் விடயங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும். நீங்கள் உங்கள் மறைமுக எதிரிகளைக் கண்டறிந்து அவர்களிடம் இருந்து விலகிச் செல்வீர்கள். உங்கள் அலுவலகத்தில் இருக்கும் ஊழியர்கள் மற்றும் மேலாளருடன் உங்களுக்கு இருக்கும் உறவில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் அலுவலகத்தில் நீங்கள் உங்களுக்கான முக்கியத்துவத்தைப் பெரும் போது உங்கள் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
மேலும் இந்த 2022 ஆம் ஆண்டின் இறுதியில் உங்களுக்கு பதவி உயர்வோடு சம்பள உயர்வும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். மே 2022 முதல் உங்கள் உத்தியோகத்தில் நல்ல மாற்றத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம். இந்த 2022 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் உங்களுக்கு நல்ல போனஸ் மற்றும் பங்குகள் கிடைப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மொத்தத்தில் மே 2022 முதல் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் தரக்கூடிய ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும்.
Prev Topic
Next Topic