2022 புத்தாண்டு தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்



சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த 2022 ஆம் ஆண்டு அதிக தடைகளை தொழில்முனைவோர்களுக்கு உண்டாக்குவார். ஆனால் குரு இந்த 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் உங்களுக்கு சிறப்பான பலன்களை தருவார். சனி பகவான் உங்களுக்கு தடைகளையும் தாமதங்களையும் ஏற்படுத்தினாலும், குரு அந்த பிரச்சனைகளில் இருந்து வெளிவர் உங்களுக்கு உதவி செய்வார்.


ஏப்ரல் 2022 வரை உங்களுக்கு நல்ல வளர்ச்சியை தரும் புதிய ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும். பண வரத்து அதிகரிப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களுக்கு போதிய நிதி கிடைக்கும். உங்கள் நிதி தேவைகளை உங்களால் சமாளிக்க முடியும். சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட், இன்சூரன்ஸ் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் தங்களுக்கு அதிகரிக்கும் செல்வாக்கு, புகழ் மற்றும் வெகுமதிகளால் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

ஏப்ரல் 2022 வரை உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். ஜூலை 2022 முதல் டிசம்பர் 2022 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் சோதனை காலத்தை சந்திப்பீர்கள். ஜூலை 2022 ஐ அடைந்ததும் நீங்கள் ரிஸ்க் எடுப்பதை தவிர்த்து விட வேண்டும், மேலும் வளர்ச்சியை எதிர் பார்கின்றீர்கள் என்றால், உங்கள் பிறந்த சாதகத்தின் பலன் இருக்க வேண்டும். சனி பகவான் நீண்ட கால அடிப்படையில் உங்களுக்கு உதவ மாட்டார் என்பதால் நீங்கள் உங்கள் வணிகத்தை விரிவுபடுத்தும் முயற்சியை தவிர்த்துவிடுவது நல்லது.



Prev Topic

Next Topic