2022 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்



கடந்த 2021 ஆம் ஆண்டு சனி பகவனும் குருவும் இணைந்து உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டில் நவம்பர் 2௦, 2021 வரை சஞ்சரித்ததால் உங்கள் வாழ்க்கைத்துணை, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர்களுடன் இருந்த உறவு அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும். குரு இந்த 2022 புத்தாண்டில் உங்கள் ராசியின் 11 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல மாற்றங்களைத் தருவார்.


உங்கள் வாழ்க்கைத்துணை, குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் இருக்கும் உறவில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் எந்த அரசியலும் இருக்காது. நீங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பிரச்சனைகளை சரி செய்வீர்கள். திருமணம், புதுமனை புகு விழா, ஆண்டு விழா போன்ற சுப காரியங்களை / நிகழ்சிகளை நடத்தலாம். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல பெயரையும் புகழையும் பெரும். கடந்த நாட்களில் உங்களை மதிக்காதவர்கள் தற்போது உங்களுடன் நல்ல உறவை மீண்டும் வளர்த்துக் கொள்ள முயற்சிப்பார்கள்.

ஆனால் இந்த 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சனி பகவான் மற்றும் ராகுவின் பாதகமான தாக்கங்கள் அதிகம் உணரப்படும். ஜூலை 2022 முதல் செப்டம்பர் 2022 வரை நீங்கள் சில பின்னடைவுகளை சந்திப்பீர்கள். ஆனால் அக்டோபர் 2022 முதல் டிசம்பர் 2022 வரையிலான காலகட்டத்தில் விடயங்கள் உங்கள் கட்டுபாட்டை மீறி போகலாம்.




Prev Topic

Next Topic