![]() | 2022 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
இந்த 2022 புத்தாண்டு உங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. உங்கள் வங்கிக் கடன் குறைந்த வட்டி விகிதத்திற்கு இந்த ஆண்டின் முதல் சில மாதங்களுக்குள் ஒப்புதல் பெரும். மேலும் உங்கள் கடனை செட்டில் செய்யவும் உங்களுக்கு கடன் தந்தவர்களிடம் இருந்து உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டில் இருக்கும் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு மேலும் உதவிகளை செய்வார்கள். நீங்கள் முன்பே வேலை செய்து உங்கள் நிறுவனத்தில் இருந்தோ அல்லது இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்தோ நீங்கள் ஒரு பெரியத் தொகையை செட்டில்மென்ட்டாக எதிர்பார்த்தால், அது உங்களுக்கு விரைவில் கிடைக்கும். நிதி பிரச்சனைகளில் இருந்து நீங்கள் வெளியில் வருவீர்கள். புது வீடு வாங்கி குடி பெயர இது ஏற்ற நேரம். தங்க கட்டி அல்லது நகைகள் வாங்குவதில் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்.
ஆனால், அத்தகைய அதிர்ஷ்டம் உங்களுக்கு ஜூலை 2022 வரை மட்டுமே இருக்கும். ராகு உங்கள் ஜென்ம ராசியிலும், சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டிலும் சஞ்சரித்து ஜூலை 2022 முதல் உங்கள் நிதி நிலையை மோசமாக பாதிப்பார்கள். உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். நீங்கள் உங்கள் நிதி தேவைகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய தேவை ஏற்படலாம். அக்டோபர் 2022 முதல் டிசம்பர் 2022 வரை விடயங்கள் மோசமாகலாம். உங்களுக்கு அதிகரிக்கும் கடனால் நீங்கள் பீதி அடையும் நிலையில் இருப்பீர்கள். உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு வங்கியில் கடன் வாங்க சூரிட்டி தருவதை தவிர்த்து விடுங்கள். 2022 இன் இறுதி காலாண்டில் நீங்கள் பண விடயங்களில் ஏமாற்றப்படலாம்.
Prev Topic
Next Topic