2022 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

ஜனவரி 01, 2022 முதல் April 14, 2022 வரை சிறப்பான நேரம் (75 / 100)



இந்த பாகத்தில் குரு உங்கள் லாபஸ்தானமான 11 ஆம் வீட்டில் சஞ்சரிப்பார். கேது உங்கள் ராசியின் 8 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலனைத் தருவார், ஆனால், ராகு நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை. ஆனால் குரு சனி பகவான் மற்றும் ராகுவால் ஏற்படும் எதிர்மறை சக்திகளை குறைத்து உங்களுக்கு இந்த பாகத்தில் நல்ல அதிர்ஷ்டங்களை தருவார்.



கடந்த ஆண்டு உங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து நீங்கள் வெளியில் வருவீர்கள். உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்வீர்கள். உங்களுக்கு இருக்கும் மனக் கவலை மற்றும் மன அழுத்தத்தில் இருந்து வெளியில் வருவீர்கள். இந்த பாகத்தில் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவீர்கள். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு நீங்கள் திருமணம் நிச்சயிப்பீர்கள். சுப காரியங்களை நிகழ்த்துவதில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

புது வாய்ப்புகளுக்கு முயற்சி செய்ய இது சிறந்த நேரம். உங்களுக்கு நல்ல சம்பளத்தோடு நல்ல வேலை வாய்ப்பும் கிடைக்கும். உங்களுக்கு வேலை பளு அதிகமாக இருந்தாலும், உங்களுக்கு அதற்கேற்ற வெகுமதிகளும் கிடைக்கும். உங்கள் நிதி நிலை பெரும் அளவு முன்னேற்றம் பெரும். நீங்கள் விரைவாக உங்கள் கடனை அடைத்து விடுவீர்கள். புது வீடு வாங்கி குடி பெயர இது ஏற்ற நேர. பங்கு சந்தை வர்த்தகம் உங்களுக்கு நல்ல லாபத்தை தரும். ஆனால் சனி பகவான் நல்ல நிலையில் இல்லாததால் ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும்/ அப்படி செய்ய வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதகத்தின் உதவி இருக்க வேண்டும்.





Prev Topic

Next Topic