2022 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

அக்டோபர் 23, 2022 முதல் டிசம்பர் 31, 2022 வரை சாதகமற்ற நேரம் (30 / 100)



அக்டோபர் 23, 2022 அன்று சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைவார். குரு உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டில் நவம்பர் 24, 2022 அன்று வக்கிர நிவர்த்தி அடைவார். ராகு மற்றும் கேதுவும் நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை. இது உங்களுக்கு மிகவும் கடுமையான சோதனை காலமாக இருக்கலாம்.


நீங்கள் உங்கள் உடல் நலத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் தூக்கம் இல்லாத இரவுகளை கடக்க நேரலாம். உங்கள் மருத்துவ செலவுகள் அதிகமாகலாம். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்கமாட்டார்கள். உங்கள் குடும்பத்தில் அதிகரிக்கும் பிரச்சனைகளால் உங்களுக்கு மன நிம்மதி இல்லாமல் போகலாம். குழந்தை பேறு பெரும் வாய்ப்பு தாமதமாகும். உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணையை கண்டறிந்து திருமண முயற்சிகள் செய்ய இது ஏற்ற நேரம் இல்லை. பெப்ரவரி 2023 வரை சுப காரியங்களை தள்ளிப்போட முயற்சி செய்வது நல்லது.

இந்த பாக காலகட்டத்தில் உங்கள் உத்தியோக வாழ்க்கை மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழக்கும் வாய்ப்பும் உள்ளது/ உங்களு அலுவலகத்தில் நடக்கும் அரசியலால் நீங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படுவீர்கள், உங்கள் மீது குற்றமும் சாட்டப்படலாம். தொழில்முனைவோர்கள் அதிக சவால்களை சந்திப்பார்கள். நீங்கள் வெளிநாட்டில் வேலை பார்கின்றீர்கள் என்றால், உங்கள் விசா அந்தஸ்த்தை இழந்து உங்கள் தாய்நாடு திரும்பும் சூழல் ஏற்படலாம்.



முடிந்த வரை பயணம் செய்வதை தவிர்த்துவிடுங்கள். உங்கள் நிதி நிலை மோசமாக பாதிக்கப்படலாம். நீங்கள் பீதி அடையும் நிலையில் உங்கள் கடன் அதிகரிக்கலாம். உங்கள் பங்குச்சந்தை வர்த்தக முதலீடுகள் உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தலாம். பண விடயங்களில் நீங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம்/ நீங்கள் இந்த காலகட்டத்தில் சோதிடம், கடவுள் வழிபாடு, தியானம் போன்றவற்றின் முக்கியத்துவத்தை உணருவீர்கள்.

Prev Topic

Next Topic