2022 புத்தாண்டு உடல்நலம் ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

உடல்நலம்



இந்த 2022 ஆம் ஆண்டின் முதல் சில மாதங்களில் நீங்கள் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவீர்கள். சரியான மருத்துவம் கிடைத்து விரைவாக குணமடைவீர்கள் உடல் உபாதைகளில் இருந்து வெளியில் வருவீர்கள். உங்கள் மருத்துவ செலவுகள் குறையும். மேலும் நல்ல தூக்கத்தையும் பெறுவீர்கள். ஆனால் உங்களுக்கு கிடைத்துள்ள இந்த அதிர்ஷ்டங்கள் ஜூன் 2022 வரை மட்டுமே.


ராகு ஏப்ரல் 14, 2022 அன்று உங்கள் ஜென்ம ராசிக்கு பெயர்ச்சி ஆவதால், நல்ல பலனை நீங்கள் எதிர்பார்க்க முடியாது.குரு மே 2022 முதல் உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு தூக்கம் இல்லாத இரவுகளை தருவார். சரியான உணவு முறை, உடற்பயிற்சி ஆகியவற்றை கடைப்பிடித்து செப்டம்பர் 2022 வரை நீங்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.

அக்டோபர் 2022 இன் இறுதி பாகத்தில் சனி பகவான் வக்கிர நிவர்த்தி அடைவதால், உங்களுக்கு எச்சரிக்கை அறிகுறி உண்டாகும். சனி பகவான் உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டில், மகர ராசியில் வக்கிர நிவர்த்தி அடைவதால், இதன் தாக்கம் கடுமையாக இருக்கலாம். அக்டோபர் 2022 முதல் உங்கள் உடல் நலம் பாதிக்கப்படலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் அறுவைசிகிச்சை செய்து கொள்ள வேண்டிய தேவையும் ஏற்படலாம். உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். தினமும் காலையில் ஆதித்ய ஹிருதயம் கேட்டு வருவதால் அதிகம் பலம் பெறுவீர்கள்.



Prev Topic

Next Topic