![]() | 2022 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | காதல் |
காதல்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் குரு உங்கள் ராசியின் 11 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்கள் காதல் வாழ்க்கையில் ஏதேனும் கருத்துவேறுபாடுகள் நீங்கள் காதலிப்பவருடன் உங்களுக்கு ஏற்பட்டால், அது விரைவாக நல்ல தீர்வைப் பெரும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் அதிகம் ஆர்வத்தை காட்டுவீர்கள். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்களுக்கு ஏற்ற வாழ்க்கைத்துணை பெற்று ஜூன் 2022 க்கு முன் திருமணம் நடக்கவும் வாய்ப்பு உள்ளது.
திருமணம் ஆனவர்கள் நல்ல மகிழ்ச்சியோடு இருப்பார்கள். நீண்ட காலமாக குழந்தை பேறுக்காக காத்திருந்த தம்பதியினர் அந்த பாக்கியத்தை இப்போது பெறுவார்கள். இயற்கையாகவோ அல்லது மருத்துவ உதவியோடு உங்களுக்கு குழந்தை பெறும் பாக்கியம் கிடைக்கும். உங்கள் பெற்றோர்கள் உங்கள் காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பார்கள்.
ஆனால் ஜூலை 2022 முதல் நீங்கள் அதிக சவால்களை சந்திக்க நேரலாம். உங்கள் வாழ்க்கையில் புதிய பிரச்சைகள் தோன்றத் தொடங்கும். அக்டோபர் 2022 முதல் நீங்கள் சோதனை காலத்தில் இருப்பீர்கள். அக்டோபர் 2022 முதல் புதிய உறவைத் தொடங்கும் முயற்சியை தவிர்த்துவிடுவது நல்லது. அக்டோபர் 2022 முதல் டிசம்பர் 2022 வரை நீங்கள் தற்காலிகமாக பிரியும் வாய்ப்பும் உள்ளது. மொத்தத்தில் 2022 இன் முதல் பாதி உங்களுக்கு சிறப்பாக உள்ளது ஆனால் 2022 இன் இரண்டாம் பாதி உங்களுக்கு சோதனை காலமாக இருக்கும்.
Prev Topic
Next Topic