2022 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

கண்ணோட்டம்


2022 மேஷ ராசி புத்தாண்டு பலன்கள். இந்த 2022 புத்தாண்டு உங்களை நல்ல பலன்களுடன் வரவேற்கிறது. குரு உங்கள் ராசியின் 11 ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். சனி பகவான், ராகு மற்றும் கேதுவின் தாக்கம் குறைவாகவே இருக்கும். ஏப்ரல் 14, 2022 வரை குருவின் பலத்தால் உங்கள் உடல் நலம் நல்ல ஆரோகியதொடு இருக்கும், உறவுகள் நல்ல நிலையில் இருக்கும், உங்கள் உத்தியோகம் சிறப்பாக இருக்கம் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி இருக்கும். நீங்கள் சுப காரியங்களை நடத்துவீர்கள்.
ஜூலை 28, 2022 வரை உங்களுக்கு இந்த அதிர்ஷ்டங்கள் தொடரும். சனி பகவான் அதி சரமாய் சஞ்சரிப்பார். ஆனால், ஜூலை 28, 2022 க்கு மேல் விடயங்கள் சிறப்பாக நடக்காமல் போகலாம். நீங்கள் அக்டோபர் 2022 ஐ அடைந்ததும், சோதனை காலத்தில் இருப்பீர்கள். ராகு உங்கள் ஜென்ம ராசியிலும் கேது உங்கள் களத்திற ஸ்தானத்திலும் அக்டோபர் 2022 வரை சஞ்சரித்து பாதகமான பலன்களை உண்டாக்குவார்கள். சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஏற்படும் தாக்கம் அக்டோபர் 2022 முதல் கடுமையாக உணரப்படும். ஆகஸ்ட் 2022 முதல் டிசம்பர் 2022 வரை சுப காரியங்கள் நிகழ்த்துவதை தவிர்த்துவிடுங்கள்.


ஜூன் 2022 க்கு முன் உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை பற்றிக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் செட்டிலாகி விட முயற்சி செய்யுங்கள். கடவுள் வழிபாடு செய்து உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு அக்டோபர் 2022 முதல் வரவிருக்கும் சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும்.



Prev Topic

Next Topic