2022 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

ஏப்ரல் 14, 2022 முதல் ஜூலை July 28, 2022வரை உத்தியோகத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும் ஆனால் உடல்நல பிரச்சனைகள் ஏறப்டலாம் (75 / 100)


குரு உங்கள் ராசியின் 12 ஆம் வீடான மீன ராசியில் இந்த பாக காலகட்டத்தில் சஞ்சரிப்பார். சனி பகவான் ஜூன் 4, 2022 அன்று கும்ப ராசியில் வக்கிர கதி அடைவார். ராகு உங்கள் ஜென்ம ராசிக்கும், கேது உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆவார்கள். இது உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் பெயர்ச்சியாக இருக்கலாம்.


கடந்த பாகத்தில் இருந்து உங்களுக்கு நேர்மறை பலன்கள் இந்த பாகத்திலும் சற்று தொடரும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் நீங்கள் உங்கள் உடல் நலத்தின் மீது சற்று கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வாழ்க்கைத்துணையின் உடல் நலம் பாதிக்கப்படலாம். ஆனால் உங்கள் குடும்பத்தினர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் குரு உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆவதன் பலநாள் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் ஆடம்பர மற்றும் விலையுயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். இது உங்கள் சேமிப்பை பாதிக்கலாம். நீங்கள் உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்தால், உங்கள் நிதி நிலை நல்ல நிலையில் இருக்கும்.


உங்கள் அலுவலகத்தில் நீங்கள் நல்லப் பலனைப் பெறுவீர்கள். உங்கள் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் உங்களுக்கு ஜூன் மற்றும் ஜூலை 2022 மாதங்களில் கிடைக்கும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், உங்களுக்கு அடுத்த நிலைக்கு பதவி உயர்வும் கிடைக்கும். தொழில்முனைவோர்களுக்கு புது ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கக்கூடிய நல்ல நேரமாக இது உள்ளது. பண வரத்து பல வழிகளில் இருந்தும் உங்களுக்கு கிடைக்கும். புது வீடு வாங்கி குடி பெயர இது ஏற்ற நேரம். பங்குச்சந்தை வர்த்தகம் உங்களுக்கு மிதமான லாபத்தை தரும்.

Prev Topic

Next Topic