2022 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி)

வேலை / உத்தியோகம்


சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டில் 2022 ஆண்டு சஞ்சரிப்பார். இது உங்கள் உத்தியோக வளர்ச்சிக்கு ஏற்ற நல்ல அறிகுறியாக தெரியவில்லை. ஆனால் குரு உங்கள் ராசியின் 11 ஆம் வீட்டில் சஞ்சரித்து சனி பகவான் இந்த ஆண்டின் முதல் பாதியில் உண்டாக்கும் தடைகளை நீக்க உதவுவார். உங்களுக்கு தொடர்ச்சியாக வேலை பளுவும் பதற்றமும் இருக்கும். ஆனால் உங்களால் அதனை சமாளித்து சரியான நேரத்தில் உங்கள் ப்ரோஜெக்ட்டை முடித்து விட முடியும். மேலும் உங்களது கடுமையான உழைப்பிற்கு ஏற்ற சன்மானங்களும் உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு கிடைக்கும் சம்பளமும் போனசும் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
ஜூன் 2022 வரை வெளிநாட்டிற்கு குடிபெயர ஏற்ற காலமாக உள்ளது. மேலும் நீங்கள் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம், உள்நாட்டிலேயே இடமாற்றம் மற்றும் குடியேற்ற பலன்கள் போன்ற நல்ல பலன்களை உங்கள் நிறுவனத்தில் இருந்து நீங்கள் பெறுவீர்கள். ஆனால் ஜூலை 2022 முதல் சில சிக்கல்கள் ஏற்படலாம். உங்கள் உத்தியோக வளர்ச்சியில் சில தாமதங்கள் ஏற்படலாம். உங்கள் அலுவலகத்தில் ஏற்படும் அரசியலை சமாளிப்பதில் உங்களுக்கு கடுமையான நேரம் நிலவலாம்.


அக்டோபர் 2022 ஐ நீங்கள் அடைந்ததும், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டில் சஞ்சரித்து வக்கிர நிவர்த்தி ஆவதனால் ஏற்படும் தாக்கத்தை அதிகமாக உணருவீர்கள். அக்டோபர் 2022 முதல் டிசம்பர் 2022 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் உங்கள் எதிர்பார்புகளை குறைத்துக் கொண்டு மிகவும் பொறுமையாக இருந்து உங்களது கடுமையான சூழலை சமாளிக்க முயற்சி செய்ய வேண்டும்.


Prev Topic

Next Topic