2022 புத்தாண்டு தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி)

தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்


தொழில்முனைவோர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கடுமையான காலகட்டத்தை கடக்க வேண்டிய நிலை இருக்கும். குரு உங்கள் ராசியின் 8 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதாலும், ராகு உங்களுக்கு அதிக பிரச்சனைகளை மறைமுக எதிரிகளாலும் போட்டியாளர்களாலும் உண்டாக்குவதாலும் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். உங்கள் தொழில் பங்குதாரருடன் உங்களுக்கு பிரச்சனைகள் இருந்தாலும், உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்களுக்கு எதிர்பாராத பின்னடைவுகள் ஏற்படலாம். மே 2022 வரை உங்கள் வணிகத்தை விரிவுபடுத்தும் முயற்சியை தவிர்த்துவிடுவது நல்லது. மேலும் நிர்வாக செலவுகளையும் குறைக்க முயற்சி செய்ய வேண்டும்.


குரு உங்கள் ராசியின் 9 ஆம் வீட்டில் சஞ்சரித்து ஏப்ரல் 14, 2022 க்கு மேல் உங்களுக்கு பலத்தை அதிகரிப்பார். மே 2022 முதல் நீங்கள் நல்ல மாற்றங்களை காண்பீர்கள். அக்டோபர் / நவம்பர் 2022 ஐ அடைந்ததும் நீங்கள் உங்களுக்கு ஏற்படும் முன்னேற்றங்களால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பண வரத்தை அதிகரிக்கும் வகையில் உங்களுக்கு ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும். நீங்கள் ஒரு தொடக்க நிலை வணிகத்தை நடத்திக் கொண்டிருந்தாள், அதற்கு நல்ல சலுகைகளும் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், அக்டோபர் / நவம்பர் 2022 வாக்கில் நீங்கள் பணக்காரராகும் வாய்ப்பும் உள்ளது. சுயதொழில் புரிவோர்கள் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் நல்ல அதிர்ஷ்டங்களைப் பெறுவார்கள்.



Prev Topic

Next Topic