![]() | 2022 புத்தாண்டு கல்வி ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | கல்வி |
கல்வி
மாணவர்களுக்கு இது சவால் நிறைந்த காலமாக இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் மனம் குழப்பமாகவும், நீங்கள் அதிக தனிமையாக இருப்பதாகவும் உணருவீர்கள். உங்கள் நண்பர்களுடன் உங்களுக்கு கருத்துவேறுபாடுகள் ஏற்படலாம். நீங்கள் கடுமையாக உழைத்தால் மட்டுமே பரிச்சையில் நல்ல மதிப்பென்களைப் பெறுவீர்கள். ஏப்ரல் 2022 வரை கல்லூரியில் சேரவும் விடயங்களில் உங்களுக்கு ஏமாற்றம் ஏற்படலாம். நீங்கள் நல்ல ஆலோசகரின் ஆலோசனையைப் பெற்று இந்த சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும்.
மே 2022 முதல் குரு உங்கள் ராசியின் 9 ஆம் வீடான பாக்கிய ஸ்தானத்திற்கு பெயர்ந்ததும் நீங்கள் சிறப்பான முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். உங்களுக்கு நல்ல பள்ளி மற்றும் பல்கலைகழகத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு பிறகு சேர்க்கை கிடைக்கும். நவம்பர் 2022 வாக்கில் உங்கள் சாதனைகளை கண்டு உங்கள் குடும்பத்தினர்கள் பெருமைபடுவார்கள். விளையாட்டில் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கும் நல்ல நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள்.
Prev Topic
Next Topic