![]() | 2022 புத்தாண்டு (முதல் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | முதல் பாகம் |
ஜனவரி 01, 2022 முதல் ஏப்ரல் 14, 2022 வரை கடுமையான சோதனை காலம் (25 / 100)
எதிர்பாராவிதமாக இந்த பாகம் உங்களுக்கு ஒரு கடுமையான சோதனை காலமாக இருக்கும். குரு உங்கள் ராசியின் 8 ஆம் வீட்டிலும் சனி பகவான் உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டிலும் மற்றும் கேது உங்கள் ராசியின் 5 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது மிகவும் சாதகமற்ற நிலையாக உள்ளது. உங்கள் உடல் மற்றும் மனம் இந்த காலகட்டத்தில் பாதிக்கப்படும். உங்கள் குடும்பத்தினர்களின் உடல் நலம் பாதிக்கப்படும். உங்களைச் சுற்றி பலர் இருந்தாலும், நீங்கள் தனிமையாகவே உணருவீர்கள்.
உங்கள் உறவுகள் சார்ந்த விடயங்களில் உங்களுக்கு கசப்பான அனுபவமே உண்டாகும். நீங்கள் புதிதாக திருமணம் ஆனவராக இருந்தால், அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். உங்கள் உறவுகளுடன் தேவையற்ற கருத்துவேறுபாடுகளும் கடுமையான வாக்குவாதங்களும் ஏற்படும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் தற்காலிகமாக பிரியும் வாய்ப்பும் உள்ளது. புது வீட்டிற்கு குடி பெயரவோ அல்லது சுப காரியங்கள் நிகழ்த்தவோ இது ஏற்ற நேரம் இல்லை. உங்களுக்கு ஏற்படும் தோல்விகள், ஏமாற்றங்கள் மற்றும் அவமானங்களால் உங்களுக்கு மன உளைச்சல்கள் ஏற்படலாம்.
உங்கள் உத்தியோகம் சார்ந்த விடயங்களுக்கு இது சவால் நிறைந்த நேரமாக இருக்கும். நீங்கள் 24/7 வேலை பார்த்தாலும் உங்கள் நிர்வாகத்தினரை மகிழ்ச்சியடையச் செய்ய முடியாது. மேலும் எந்த பலனும் இன்றி உங்கள் உத்தியோகத்தை இழக்கும் நிலையம் ஏற்படலாம். உங்களுக்கு சட்ட பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மேலும் உங்கள் மீது தவறு இல்லை என்றாலும் நீங்கள் குற்றம் சாட்டப்படுவீர்கள்.
முடிந்த வரை பயணம் செய்வதை தவிர்த்துவிடுங்கள். விசா மற்றும் குடியேற்றப் பலன்கள் போன்ற எந்த பலனையும் உங்களால் எதிர்பார்க்க முடியாது. முடிந்த வரை யாருக்கும் பணம் கடன் தருவதை தவிர்த்துவிடுவது நல்லது மேலும் கடன் வாங்குவதையும் தவிர்த்துவிடுங்கள். பங்குச்சந்தை வர்த்தகம் உங்களுக்கு நிதி இழப்புகளை ஏற்படுத்தலாம். உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு நீங்கள் இந்த கடுமையான காலகட்டத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும்.
Prev Topic
Next Topic