2022 புத்தாண்டு காதல் ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி)

காதல்



நீங்கள் காதலித்துக் கொண்டிருந்தாள், மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. உங்கள் இருவருக்கும் இடையே மூன்றாவது நபர் வந்து விடயங்களை மோசமாக்கலாம். உங்களுக்கு எதிரான சதி மற்றும் துரோகங்களால் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். நீங்கள் பிரிந்துவிடலாம் என்றும் நினைக்கலாம். மேலும், நீங்கள் தவறான நபரை நோக்கியும் ஈர்க்கப்படலாம். இதனால் நீங்கள் மிகவும் மோசமாக ஏமாற்றப்படலாம்.


பெப்ரவரி மற்றும் மார்ச் 2022 வாக்கில் உங்களுக்கு அதிக மன உளைச்சலும் ஏற்படலாம். இந்த மோசமான காலகட்டத்தை நீங்கள் கடக்க வேண்டும் என்றால் அதற்கு உங்களுக்கு நல்ல நண்பர்கள் தேவை. திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பார்கள். குழந்தை பெரும் விடயத்தில் உங்களுக்கு ஏமாற்றம் ஏற்படலாம். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், இந்த ஆண்டின் முதல் பாதியில் திருமணம் செய்து கொள்ளாமலே இருப்பது நல்லது.

நீங்கள் மே / ஜூன் 2022 ஐ அடைந்ததும், விடயங்கள் பெரும் அளவு முன்னேற்றத்தைப் பெரும். நீங்கள் உங்களுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலில் இருந்து வெளியில் வருவீர்கள். நீங்கள் காதலிப்பவரை விட்டு பிரிந்திருந்தால், உங்கள் வாழ்க்கையில் என்ன நடந்ததோ அதனை ஏற்றுக் கொள்ள உங்களுக்கு மனோ பலம் கிடைக்கும். உங்கள் மனம் அமைதியாக இருக்கும். உங்கள் பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணத்தின் மீது நீங்கள் ஆர்வம் காட்டுவீர்கள். டிசம்பர் 2022 அல்லது 2023 ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு திருமணம் நடக்கும் வாய்ப்பு உள்ளது. திருமணம் ஆன தம்பதியினர் அக்டோபர் 2022 முதல் தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்து கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழத் தொடங்குவார்கள்.



Prev Topic

Next Topic