2022 புத்தாண்டு திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி)

திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள்



திரைநட்சத்திரங்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், மற்றும் ஊடகத்துறையில் இருப்பவர்கள் இந்த 2022 இன் முதல் 4 மாதங்களுக்கு அதிக சவால்களை சந்திப்பார்கள். உங்கள் படம் வெளிவர இருந்தால், அது தோல்வியடையும் வாய்ப்பு உள்ளது. இதனால் உங்கள் இரசிகர்கள் ஏமாற்றமடைவார்கள். உங்கள் பிறந்த சாதகம் பலவீனமாக இருந்தால், இந்த காலகட்டத்தில் உங்களுக்கு அவப்பெயர் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு கடன் தந்தவர்கள் பணத்தை திருப்பி கேட்பார்கள்.


ஆனால் மே 2022 முதல் விடயங்கள் நல்ல மாற்றத்தைப் பெரும். உங்களுக்கு பெரிய படங்களில் இருந்து நல்ல வாய்புகள் கிடைக்கும். உங்களுக்கு நல்ல நிதி வெகுமதிகளும் கிடைக்கும். உங்களுக்கு புகழ் அதிகரிப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நவம்பர் மற்றும் டிசம்பர் 2022 வாக்கில் நீங்கள் மக்கள் உங்கள் பக்கம் ஈர்க்கப்படுவார்கள்.

Prev Topic

Next Topic