2022 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி)

ஏப்ரல் 14, 2022 முதல் ஜூலை 28, 2022 வரை சிறப்பான முன்னேற்றம் (75 / 100)



உங்களுக்கு இப்போது ஒரு நல்ல செய்தி உள்ளது. குரு உங்கள் ராசியின் 9 ஆம் வீடான பாக்கிய ஸ்தானத்திற்கு ஏப்ரல் 14, அன்று பெயர்ச்சி ஆகிறார். ஆனால் ராகு, கேது மற்றும் சனி பகவானிடம் இருந்து எந்த பலனையும் எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் குரு உங்களுக்கு நல்ல நிவாரணத்தை தருவார். மே 2022 இல் சில வாரங்கள் நீங்கள் காத்திருந்தால் அதன் பின்னர் குருவால் கிடைக்கும் நல்லப் பலன்களை நீங்கள் காண்பீர்கள்.


கடந்த நாட்களில் உங்களுக்கு ஏறபட்ட வலிமிகுந்த சம்பவங்களில் இருந்து வெளிவர இப்போது உங்களுக்கு நல்ல வாய்புகள் கிடைக்கும். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக நீங்கள் சரி செய்வீர்கள். உங்களுக்கு உங்கள் காதல் வாழ்க்கையில் பிரிவு ஏற்பட்டிருந்தால், உங்களுக்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு நீங்கள் தயாராவீர்கள். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு நீங்கள் திருமணமும் நிச்சயிக்கலாம். சுப காரியங்கள் நிகழ்த்த இது ஏற்ற நேரமும் கூட.

புது வேலை வாய்ப்புக்கு முயற்சிக்க இது ஏற்ற நேரம். உங்கள் வேலை பளு மற்றும் பதற்றம் குறையும். உங்கள் உத்தியோக வாழ்க்கையை நீங்கள் எளிதாக சமாளிப்பீர்கள். பதவி உயர்வு போன்ற விடயங்களைப் பற்றி பேச இது ஏற்ற நேரம். தொழில்முனைவோர்கள் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள். சுய தொழில் புரிவோர்கள் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் சிறப்பாக செயல்படுவார்கள். வெளிநாட்டிற்கு பயணம் செய்ய உங்களுக்கு விசா கிடைக்கும். குடியேற்றப் பலன்கள் போன்ற விடயங்களில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.



உங்கள் நிதி நிலையில் பெரும் அளவு முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் விரைவாக உங்கள் கடனை அடைத்துவிடுவீர்கள். உங்கள் வங்கிக் கடன் ஒப்புதல் பெரும். பங்குச்சந்தை வர்த்தகம் உங்களுக்கு நல்ல லாபத்தை தரும். புது வீடு வாங்கி குடி பெயர இது ஏற்ற நேரம்.

Prev Topic

Next Topic