![]() | 2022 புத்தாண்டு வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
ஏப்ரல் 14, 2022 வரை உங்களுக்கு நிதி இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், நீங்கள் பங்குச்சந்தை வர்த்தகத்தை முற்றிலுமாக தவிர்த்துவிடுவது நல்லது. உங்கள் முதலீடுகளால் நீங்கள் பெரும் அளவு பணத்தை இழக்க நேரலாம். நீங்கள் ரியல் எஸ்டேட் முதலீடுகளில் இருந்து விலகி இருப்பது நல்லது. புது வீடு வாங்க இது ஏற்ற நேரம் இல்லை. நீங்கள் பாதுகாப்பான முதலீடுகளை செய்ய வேண்டும்.
குரு உங்கள் ராசியின் 9 ஆம் வீட்டிற்கு ஏப்ரல் 14, 2022 அன்று பெயர்ச்சி ஆனதும். நீங்கள் பலம் பெறுவீர்கள். இருப்பினும், உங்கள் முன்னேற்றத்தின் வேகம் உங்கள் பிறந்த சாதகத்தை பொறுத்தே உள்ளது. ஏனென்றால், ராகு உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டிலும் சனி பகவான் 7 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது சாதக்மாற்ற நிலையாக உள்ளது. நீங்கள் நீண்டகால பங்குகளில் முதலீடு செய்யலாம். ஆனால் ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு அக்டோபர் 2022 இறுதி வரை காத்திருக்க வேண்டும்.
அக்டோபர் 28, 2022 முதல் டிசம்பர் 31, 2022 வரை உங்களுக்கு அதிர்ஷ்ட சீட்டு மற்றும் சூதாட்டம் போன்றவற்றில் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். நீங்கள் இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொண்டு சொத்துகள் வாங்க முதலீடுகள் செய்யலாம். நாடுகளுக்கு இடையே நீங்கள் பண பரிவர்த்தனையும் செய்யலாம். விஷ்ணு சஹாசார நாமம் கேட்டு சத்யநாராயண விரதம் இருப்பதால் நிதி நிலையில் உங்கள் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
Prev Topic
Next Topic