2022 புத்தாண்டு பயணம் மற்றும் குடியேற்றப் பலன்கள் ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி)

பயணம் மற்றும் குடியேற்றப் பலன்கள்



ஏப்ரல் 2022 வரை பயணம் உங்களுக்கு அதிக பிரச்சனைகளை உண்டாக்கலாம். போதிய நண்பர்கள் இல்லாததால் உங்கள் சமூக வாழ்க்கை பாதிக்கப்படலாம். நீங்கள் எந்த உதவியும் கிடைக்காததால் அதிக தனிமையை உணருவீர்கள். உங்களுக்கு மனக் கவலையும் மன அழுத்தமும் அதிகரிக்கலாம். முடிந்த வரை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடனேயே இருப்பது நல்ல யோசனையாக இருக்கும். இது மிகவும் முக்கியம். மேலும் பயண சீட்டு, தங்கும் விடுதி போன்ற விடயங்களில் உங்களுக்கு நல்ல சலுகைகள் கிடைக்காமல் போகலாம். நீங்கள் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தால், உங்கள் விசா அந்தஸ்த்தை இழந்து தாய்நாடு திரும்பும் சூழல் ஏற்படலாம்.



ஏப்ரல் 2022 ஐ நீங்கள் கடந்ததும் உங்கள் சோதனை காலம் முடிந்துவிடும். உங்கள் விசா மற்றும் குடியேற்றம் சார்ந்த பிரச்சனைகள் நல்லத் தீர்வைப் பெரும். உங்கள் தொழில் சார்ந்த பயணம் உங்களுக்கு பெரும் அளவு வெற்றியைத் தரும். இந்த ஆண்டின் இரண்டாம் பாதி உங்களுக்கு பயணம் சார்ந்த விடயங்களுக்கு சிறப்பாக உள்ளது. உங்களுக்கு செல்லும் இடங்களில் நல்ல தங்கும் வசதிகள் கிடைக்கும். சுற்றுலாவின் போது நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புது கார் வாங்கி உங்கள் சௌகரியங்களை அதிகரித்துக் கொள்ள நவம்பர் 2022 வாக்கில் சிறப்பான நேரமாக உள்ளது.



Prev Topic

Next Topic