![]() | 2022 புத்தாண்டு வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal - Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த ஆண்டின் தொடக்கம் வலி மிகுந்ததாக இருக்கலாம். உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கு எதிரான சதி மற்றும் அரசியலால் நீங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படிருக்கலாம். நீங்கள் மிகவும் நம்பிக்கை வைத்தவரே உங்களுக்கு எதிராக விளையாடுவார். உங்களுக்கு எதிரான துரோகங்களை ஜீரணிப்பது உங்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். உங்கள் அலுவலகத்தில் யாருடனும் மனதளவில் மிகவும் நெருக்கமாகிவிடாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். நீங்கள் அப்படி செய்யாவிட்டால், ஏப்ரல் 2022 க்கு முன் நீங்களாகவே உங்கள் உத்தியோகத்தை விட்டுவிட வேண்டிய நிலை ஏற்படலாம்.
மே 2022 க்கு பிறகு இந்த ஆண்டின் வரவிருக்கும் மாதங்கள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். நீங்கள் அதிக சக்தியைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் விடயங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும். உங்களுடைய மறைமுக எதிரியை நீங்கள் அடையாளம் கண்டு அவரிடத்தில் இருந்து விலகிவிடுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் மேலாளர் மற்றும் பிற ஊழியர்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை மீண்டும் பெற்று உங்கள் அலுவலகத்தில் உங்களுக்கான முக்கியத்துவத்தையும் பெறுவீர்கள்.
இந்த 2022 இன் இறுதியில் உங்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மே 2022 வாக்கில் நீங்கள் உத்தியோக மாற்றமும் செய்யலாம். உங்களுக்கு இந்த 2022 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் போனஸ் மற்றும் பங்குகள் கிடைப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மொத்தத்தில் மே 2022 க்கு மேல் இந்த ஆண்டு உங்களுக்கு நல்ல முன்னேற்றம் தரக்கூடிய ஆண்டாக இருக்கும்.
Prev Topic
Next Topic