![]() | 2022 புத்தாண்டு தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் |
தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்
சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து தொழில்முனைவோர்களுக்கு தடைகளை இந்த 2022 ஆம் ஆண்டு உண்டாக்குவார். ஆனால் குரு உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டில் சஞ்சரிப்பது ஒரு சிறப்பான விடயமாகும். குரு உங்களுக்கு ஜனவரி 2022 முதல் ஏப்ரல் 2022 வரை ஒரு குறுகிய காலத்திற்கு நல்ல அதிர்ஷ்டங்களைத் தருவார். இதனால் உங்களுக்கு பல புதிய ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும். உங்களுக்கு பண வரத்து அதிகரிப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களுக்கு போதிய நிதி கிடைக்கும்.
உங்கள் நிதி தேவைகளை நீங்கள் சமாளித்து விடுவீர்கள், சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட், இன்சூரன்ஸ் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் தங்களுக்கு அதிகரிக்கும் புகழ், செல்வாக்கு மற்றும் வெகுமதிகளால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், ஏப்ரல் 2022 வாக்கில் உங்கள் வணிகத்தை நல்ல விலைக்கு விற்றுவிட முயற்சிக்கலாம் அல்லது அதிக பங்குதாரர்களை இணைத்துக் கொண்டு ரிஸ்க் அதிகமாகாமல் குறைத்துக் கொள்ள முயற்சிக்கலாம்.
மே முதல் செப்டம்பர் 2022 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் கலவையானப் பலனை பெறுவீர்கள். ஆனால் இந்த ஆண்டின் இறுதி காலாண்டு உங்களுக்கு மிகவும் மோசமான ஒன்றாக இருக்கலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் உங்கள் வணிகத்தில் பணத்தை இழந்து உங்கள் வங்கிக் கணக்கு திவாலாகும் வாய்ப்பும் உள்ளது. எனவே ஏப்ரல் 2022 வாக்கில் நீங்கள் உங்களுக்கு நேரம் சிறப்பாக இருக்கும் போது பாதுகாப்பாக வெளியேறி விடுவது நல்ல யோசனையாக இருக்கும்.
Prev Topic
Next Topic