2022 புத்தாண்டு கல்வி ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

கல்வி



கடந்த 2021 ஆம் ஆண்டு மாணவர்கள் கடினமான நேரத்தை கடந்து வந்திருப்பார்கள். ஆனால் இந்த 2022 ஆம் ஆண்டின் தொடக்கம் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. உங்களுக்கு வரும் நாட்களில் படிப்பில் அதிக ஆர்வம் உண்டாகும். நீங்கள் கடந்த நாட்களில் செய்த தவறுகளை உணருவீர்கள். சிறப்பாக பரிச்சை எழுதுவீர்கள். உங்களுக்கு சிறந்த கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் சேர்க்கை கிடைக்கும். உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கும் புதிய நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். நீங்கள் முதுநிலை பட்டம் அல்லது Ph.D மாணவராக இருந்தால் மார்ச் / ஏப்ரல் 2022 வாக்கில் உங்கள் தீசிஸ் ஒப்புதல் பெரும்.



ஆனால் மே 2022 முதல் நீங்கள் பின்னடைவுகளை சந்திப்பீர்கள். நீங்கள் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்றால் கடுமையாக உழைக்க வேண்டும். அதிக வேலை பளு ஏற்படலாம். உங்கள் மனம் படிப்பில் ஆர்வம் கொள்ளாமல் போகலாம். அக்டோபர் 2022 முதல் உங்கள் நண்பர்கள் மூலம் உங்களுக்கு சில புதிய பிரச்சனைகள் ஏறப்டத் தொடங்கலாம். நீங்கள் ஒரு நல்ல ஆலோசகரின் ஆலோசனையைப் பெற்று இந்த ஆண்டின் இறுதி காலாண்டில் வரவிருக்கும் இந்த கடுமையான காலகட்டத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும்.



Prev Topic

Next Topic