2022 புத்தாண்டு குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்



அக்டோபர் மற்றும் நவம்பர் 2021 வாக்கில் உங்கள் உறவுகள் சார்ந்த விடயங்கள் மிகவும் மோசமாக இருந்திருக்கும். அக்டோபர் / நவம்பர் 2022 வாக்கில் உங்களுக்கு ஏற்பட்ட வலி மிகுந்த சம்பவங்களையும், அவமானங்களையும் பற்றி விவரிக்க வார்த்தைகளே இருக்காது என்று சொல்லலாம். குரு உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆனதும், உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக நீங்கள் சரி செய்து விடுவீர்கள்.



உங்கள் வாழ்க்கைத்துணை, குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் இருக்கும் உறவில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் எந்த அரசியலும் இருக்காது. நீங்கள் திருமணம், புதுமனை புகு விழா, ஆண்டுவிழா போன்ற சுப காரியங்களை நிகழ்த்துவீர்கள். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல புகழையும் பெயரையும் பெரும். கடந்த நாட்களில் உங்களை மதிக்காதவர்கள் இப்போது உங்களுடன் மீண்டும் உறவை வளர்த்துக் கொள்ள முயற்சிப்பார்கள். ஆனால் உங்களுக்கு கிடைத்துள்ள இந்த அதிர்ஷ்டம் ஏப்ரல் 14, 2022 வரை மட்டுமே.

ஆனால் மே 2022 முதல் இந்த ஆண்டு முழுவதும் வரவிருக்கும் மாதங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சனி பகவான் மற்றும் ராகுவின் தாக்கம் அதிகமாக உணரப்படலாம். மேலும் மே 2022 முதல் செப்டம்பர் 2022 வரையிலான காலகட்டத்தில் நீங்கள் சில பின்னடைவுகளை சந்திக்க நேரலாம். ஆனால் அக்டோபர் 2022 முதல் டிசம்பர் 2022 வரை நீங்கள் மிகவும் மோசமான பலன்களைப் பெற நேரலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் குடும்பத்தினரை விட்டு பிரியும் சூழலும் ஏற்படலாம். உங்கள் மீது எந்த தவறும் இல்லை என்றாலும் நீங்கள் குற்றம் சாட்டப்படலாம்.





Prev Topic

Next Topic