![]() | 2022 புத்தாண்டு நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
இந்த 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டங்கள் ஏற்படுவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் வங்கிக் கடன் எந்த சிக்கலும் இன்றி ஒப்புதல் பெரும். நீங்கள் உங்களுக்கு கடன் தந்தவர்களிடம் பேசி உங்கள் கடனை விரைவாக அடைத்து விட நல்ல வழிகளை முயற்சிக்கலாம். நீங்கள் உங்கள் கடனை விரைவாக அடைத்து விடுவதால், உங்கள் கிரெடிட் மதிப்பும் அதிகரிக்கும். நீங்கள் மும்பு வேலை பார்த்த நிறுவனம் அல்லது இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து உங்களுக்கு பெரிய அளவிலான செட்டில்மென்ட் தொகையும் கிடைக்கும். உங்கள் நிதி பிரச்சனைகளில் இருந்து வெளியில் வருவீர்கள். புது வீடு வாங்கி குடி பெயரவும் இது ஏற்ற நேரம். தங்க கட்டி அல்லது தங்க நகைகள் வாங்குவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
ஆனால் உங்களுக்கு கிடைத்துள்ள இந்த அதிர்ஷ்டம் ஏப்ரல் 2022 வரை மட்டுமே ஒரு குறுகிய காலத்திற்கு இருக்கும். ஏப்ரல் 14, 2022 அன்று வரவிருக்கும் குரு, ராகு மற்றும் கேது பெயர்ச்சி உங்களுக்கு எதிர்பார்த்த நல்ல பலனைத் தராமல் போகலாம். செப்டம்பர் 2022 வரை நீங்கள் பெரிய அளவிலான வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. செலவுகள் அதிகரிக்கலாம் மேலும் உங்கள் வருமானம் குறையலாம். எனவே நீங்கள் உங்கள் வாழ்வாதாரத்திற்காக அதிக வருவாயை உண்டாக்க முயற்சிக்க வேண்டும்.
அக்டோபர் 2022 முதல் டிசம்பர் 2022 வரையிலான காலகட்டத்தில் விடயங்கள் மோசமாகலாம். நவம்பர் 2022 வாக்கில் உங்களுக்கு அதிகரிக்கும் கடன்களால் நீங்கள் பீதி அடையும் நிலையில் இருப்பீர்கள். உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு வங்கியில் கடன் வாங்க சூரிட்டி தருவதை தவிர்த்து விடுவது நல்லது. இந்த 2022 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் நீங்கள் பண விடயங்களில் ஏமாற்றப்படலாம். மேலும் உங்களது பலவீனமாக நிதி நிலையால் நீங்கள் அவமானப்படும் சூழலும் ஏற்படலாம்.
Prev Topic
Next Topic