2022 புத்தாண்டு (நான்காம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Makara Rasi (மகர ராசி)

அக்டோபர் 23, 2022 முதல் ஜனவரி 16, 2023 வரை கடுமையான சோதனை காலம் (20 / 100)


இந்த பெயர்ச்சியால் சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியில் மூன்றாவது முறையாக வக்கிர நிவர்த்தி அடைகிறார். இந்த காலகட்டத்தில் ஜென்ம சனியின் தாக்கம் கடுமையாக உணரப்படும். மேலும் விடயங்களை மோசமாக்கும் விதமாக, குரு, ராகு மற்றும் கேது சாதகமற்ற நிலையில் சஞ்சரிகின்றார்கள். எனவே நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு இந்த சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும்.
உங்கள் உடல் நலத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் குடும்பத்தில் அதிகரிக்கும் பிரச்சனைகளால் உங்களுக்கு மனக் கவலையும், மன உளைச்சலும் ஏற்படலாம். நவம்பர் 2022 க்கு மேல் விடயங்கள் உங்கள் கட்டுபாட்டை மீறி நடக்கலாம். கடந்த நாட்களில் உங்களுக்கு எதிராக செயல்பட மறைமுக எதிரிகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழக்கும் சூழலும் ஏற்படலாம்.


மேலும் உங்கள் குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் முன் நீங்கள் அவமானப்படும் சூழலும் ஏற்படலாம். உங்களுக்கு சட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப்படலாம். பங்குச்சந்தை வர்த்தகம் உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும். இந்த காலகட்டத்தில் நீங்கள் சோதிடம், கடவுள் வழிபாடு, தியானம், யோகாசனம் போன்றவற்றின் முக்கியத்துவத்தை உங்கள் வாழ்க்கையில் உணருவீர்கள்.


Prev Topic

Next Topic